Sunday, May 5, 2024
- Advertisement -
HomeEntertainmentகைதியில் ஜார்ஜ் மரியம்.. தலைவர் 171ல் எம்எஸ் பாஸ்கர்.. ”பார்க்கிங்” பட விழாவில் லோகேஷ் கனகராஜ்...

கைதியில் ஜார்ஜ் மரியம்.. தலைவர் 171ல் எம்எஸ் பாஸ்கர்.. ”பார்க்கிங்” பட விழாவில் லோகேஷ் கனகராஜ் அப்டேட்

பேஸன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிடோர் நடித்துள்ள திரைப்படம் பார்க்கிங். ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எம்எஸ் பாஸ்கரின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கு ஹரீஷ் கல்யாண் ஒரு கார் வாங்குவதால் ஏற்படும் பிரச்சனையே இந்த படமாகும்.

- Advertisement -

ஒரேயொரு பார்க்கிங் வசதி மட்டுமே உள்ள வீட்டில் இருவரும் கார் வாங்குவதால் ஏற்படும் ஈகோ யுத்தம் ட்ரெய்லரிலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தின் பிரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார். இதனால் ரசிகர்களிடையே அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பின்னர் லோகேஷ் கனகராஜ் பேசும் போது, சில நாட்களுக்கு முன்பாகவே பார்க்கிங் படத்தை பார்த்துவிட்டேன். நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் தரத்துடன் இந்த ப்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும், ட்ரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட படங்களை போல் இருவருக்கு இடையிலான ஈகோ தான் கதை. ஒரு பார்க்கிங் பிரச்சனையை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மிகவும் எளிமையான கதையாக உள்ளது. மக்களுடன் எளிதாக இந்த கதையை கனெக்ட் செய்ய முடியும். அதேபோல் எம்எஸ் பாஸ்கர் சாருடன் பணியாற்ற ஆவலாக உள்ளேன். நிச்சயமாக அது விரைவில் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். 8 தொட்டாக்கள் படத்திற்கு பின் எம்எஸ் பாஸ்கர் பெரிய நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

- Advertisement -

கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் தவறாக நடித்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜார்ஜ் மரியத்தை பல்வேறு படங்களில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தி வருவதால், லோகேஷ் படத்தில் எப்படி பயன்படுத்த போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular