Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெயிலரின் வசூலை லியோ முறியடித்தால் எனது மீசையை எடுத்து விடுகிறேன் - உணர்ச்சி வசப்பட்டு சவால்...

ஜெயிலரின் வசூலை லியோ முறியடித்தால் எனது மீசையை எடுத்து விடுகிறேன் – உணர்ச்சி வசப்பட்டு சவால் விட்ட மீசை ராஜேந்திரன்!

தர்பார், அண்ணாத்த திரைப்படங்களின் தோல்வியால் துவண்டு கிடந்த ரஜினிகாந்துக்கு, புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம். கோலமாவு கோகிலா, டாக்டர் வெற்றி படங்களை இயக்கிய நெல்சனுக்கு, பீஸ்ட் மிகப்பெரிய பின்னடைவை கொடுக்க, அங்கிருந்து சரியான பாதையில் இயக்குநர் பயணித்து கம்பேக் கொடுத்திருக்கிறார். கடந்த மாதம் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம், மக்களின் அமோக வரவேற்பை பெற்றது. கதை என்னவோ அதர பழசாக இருந்தாலும், ரஜினிக்கே உண்டான மாஸ் காட்சிகளை சரியான இடத்தில் வைத்ததால் தப்பி இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

- Advertisement -

இரண்டாம் பாதி அநேக பேருக்கு திருப்தி கொடுக்கவில்லை என்றுதான் ஆரம்பத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும், அதிலும் தொய்வு ஏற்படும் இடங்களில் எல்லாம், ஆக்சன் காட்சிகளை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நெல்சன். போதாகுறைக்கு, கன்னட பிரபலம் சிவராஜ்குமார், மலையாள நட்சத்திரம் மோகன்லால் ஆகியோருக்கும் கிளைமேக்ஸில் தெறியான காட்சிகளை வைத்ததால்
ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களிலும் மெகா ஹிட் அடித்தது.

தற்போது வரை ஜெயிலர் திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், ரஜினிகாந்துக்கு பி.எம்.யூ.வின் எக்ஸ் 7 ரக காரை பரிசாக அளித்தது. தொடர்ந்து இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் காரை பரிசாக அளித்தது. ஒரு வழியாக ஜெயிலர் புயல் தமிழ்நாட்டை கரை கடந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக அனைவரது பார்வையும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தின் மீதுதான் உள்ளது.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின், நடன இயக்குநர் சாண்டி என ஏராளமானோர் நடித்துள்ளனர். இதில் எல்.சி.யூ. கான்செப்ட்டை லோகேஷ் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், படம் ஜெயிலரின் வசூலை முறியடிக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் மீசை ராஜேந்திரன், லியோ திரைப்படம் நிச்சயமாக ஜெயிலர் வசூலை முறியடிக்காது என்று பேசியுள்ளார். இது குறித்து கூறிய அவர், ஜெயிலர் படம் 800 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. இதையெல்லாம் லியோ திரைப்படம் முறியடிக்காது. ஒரு வேளை ஜெயிலரின் வசூலை லியோ முந்திவிட்டால் எனது மீசையை எடுத்து விடுகிறேன் என்று பேசியிருக்கிறார். நடிகரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular