Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentகமல்ஹாசன் சார் தான் காரணம்.. அவரிடம் அப்படி சொல்ல முடியாது.. ஷ்ருதி ஹாசனுடன் நெருக்கம் பற்றி...

கமல்ஹாசன் சார் தான் காரணம்.. அவரிடம் அப்படி சொல்ல முடியாது.. ஷ்ருதி ஹாசனுடன் நெருக்கம் பற்றி லோகேஷ் கனகராஜ்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தை பிடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அதிக வசூலை ஈட்டியது. லோகேஷ் கனகராஜின் செயல்பாடுகள் கமல்ஹாசனை ஈர்க்கவே, இருவரும் நட்பை தொடர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் அழைப்பின் பேரில் லியோ படத்திலும் கெஸ்ட் ரோலில் கமல்ஹாசன் நடித்து கொடுத்தார். இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசனின் மகள் ஷ்ருதி ஹாசன் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். இனிமேல் என்று தொடங்கும் பாடலின் வீடியோ சாங்கில் நடிக்க லோகேஷ் கனகராஜை அணுகினார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக ஷ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்தார். இந்த பாடலின் அறிமுக போஸ்டர் வெளியான போதே, பலருக்கும் ஆச்சரியம் ஏர்பட்டது. இந்த நிலையில் ”இனிமேல்” தொடங்கும் பாடலின் டீசர் வெளியாகியது. அதில் நடிகை ஷ்ருதி ஹாசனுடன் மிகவும் நெருக்கமாக லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஷ்ருதி – லோகேஷ் இணைந்து சிஎஸ்கே போட்டியையும் ஒன்றாக பார்த்தனர். இதனால் இருவரும் காதலிப்பதாக ரசிகர்களிடையே விவாதம் எழுந்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் தனது நீண்ட நாள் காதலியான ஐஸ்வர்யா என்பவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ”இனிமேல்” வீடியோ பாடல் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் பேசும் போது, இதற்கு முன்பாகவே சில படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் இயக்கப் பணிகளால் என்னால் செய்ய முடியவில்லை. இம்முறை ராஜ்கமல் நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்ததால் என்னால் மறுக்க முடியவில்லை. கமல்ஹாசன் சார் என்ன கேட்டாலும் என்னால் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Most Popular