Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்தியன் 2- 6 மணி நேரம் எடுத்து வைத்துள்ள ஷங்கர்.. கமல் தந்த ஐடியா

இந்தியன் 2- 6 மணி நேரம் எடுத்து வைத்துள்ள ஷங்கர்.. கமல் தந்த ஐடியா

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் ஏறத்தாழ இறுதிக் கட்ட படப்பிடிப்பை நெருங்கி இருக்கிறது. படப்பிடிப்பு முடிக்க வேண்டிய ஆர்வத்தில் படக்குழுவினர்கள் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் திரைப்படத்தைப் பற்றிய ஒரு தகவல் தற்பொழுது வெளியாக இருக்கிறது. சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரித் சிங் ,பிரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்கள் நடிக்கும் இந்தியன் டு திரைப்படத்தை மிக நீள திரைப்படமாக இயக்கி விட்டார்கள் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

பொதுவாக ஒரு திரைப்படங்கள் இரண்டறையில் இருந்து மூன்று மணி நேரம் என்பதே விதியாகும். அதற்குள் இயக்குனர் இயக்க நினைக்கும் கதையை ரசிகர்களுக்கு புரியும் வண்ணம் அமைக்க வேண்டும்.

- Advertisement -

அப்படி இருந்தால் தான் ரசிகர்களும் சலிக்காமல் பார்ப்பார்கள். சினிமா என்பது பொழுதுபோக்கு தானே தவிர ஒரு நாளில் பாதி நேரத்தை அதிலேயே செலவிடுவது யாரும் விரும்பாத ஒன்றுதான். அதுவும் தற்பொழுது இருக்கும் பிசியான காலகட்டத்தில் அப்படி யாரும் சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. அதனால் தான் அதிகபட்ச மூன்று மணி நேரம் திரைப்படத்தை அமைத்து வருகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் தற்பொழுது இந்தியன் டு திரைப்படத்தை இயக்குனர் சங்கர் 6 மணி நேர திரைப்படமாக இயக்கியவிருக்கிறார். இவ்வளவு நீள திரைப்படத்தை ஒரே திரைப்படமாக வெளியிடுவது சாத்தியமற்ற ஒன்று. அதனால் தான் இந்தியன் டு திரைப்படத்தையே இரண்டு பாகமாக பிரித்திருக்கிறார்கள் பட குழுவினர்கள்.

இந்தியன் டு திரைப்படத்தின் முதல் பாகத்தில் தொடங்கி இரண்டாவது பாகத்தில் தான் இறுதிக் காட்சியை முடித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாகம் மட்டும்தான் இந்த ஆண்டு வெளியிடப்படும் என்று தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் வருகின்ற ஆண்டான 2024 இல் இந்தியன் 2 திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகத்தை வெளியிட போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

காஞ்சனா அரண்மனை போன்ற திரைப்படங்கள் எல்லாம் இரண்டு மூன்று பாகங்களைக் கொண்டிருந்தாலும் கதைக்களங்கள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஆனால் பொன்னியின் செல்வன் பாகுபலி போன்ற திரைப்படங்கள் ஒரே வதைக்கலத்தைக் கொண்டு எந்த புள்ளியில் தொடங்கியதோ அதே பாணியில் இறுதிக்கட்ட காட்சியும் அமையும். அது போல் தான் இந்தியன் டு திரைப்படமும் ஒரே கதைக்களத்தைக் கொண்டு இரண்டு பாகங்களாக வெளியிடப்பட முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாகம் தொடக்கமாகவும் இரண்டாவது பாகம் முடிவாகவும் இருக்கும் . தற்பொழுது இந்தியன் டு திரைப்படத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை விட இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் மேலும் ஆர்வம் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular