Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாரீலீசுக்கு முன்பே பொன்னியின் செல்வன் 2 வசூலை முறியடித்த ஜெயிலர்.. !

ரீலீசுக்கு முன்பே பொன்னியின் செல்வன் 2 வசூலை முறியடித்த ஜெயிலர்.. !

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மிகப் பெரிய பட்டாளம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். ஓராண்டிற்கு மேல் ஷூட்டிங்கில் இருந்த படம் இன்னும் 4 நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது. புரொமோஷன் பணிகள் அனைத்தையும் படக்குழு கச்சிதமாக மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனத்தை அடுத்து இணையத்தில் பயங்கரமாக கலாய்க்கப்பட்டார் இயக்குனர் நெல்சன். இதனை அடுத்து ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. அவரின் மேல் ரஜினி வைத்த நம்பிக்கையே ஜெயிலர் !

இம்முறை அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் உழைப்பை இதில் நெல்சன் போட்டுள்ளார். ரஜினியுடன் சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

- Advertisement -

திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்களே இருக்கின்றன. தமிழகத்தில் முன்பதிவுகள் இன்று தொடங்கப்பட்டன. எப்போதும் இல்லாத அளவிற்கு பி.வி.ஆர் போன்ற மல்டிப்லக்சில் கார்பரேட் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. வெளியிடுவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் எதிர்பார்த்த பணத்தை பார்க்கின்றனர்.

- Advertisement -

கோலிவுட் பெரிய படங்கள் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் தான் அதிக லாபம் பார்க்கும். இது அனைவர் அறிந்த ஒன்றே. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக இரண்டாவது பாகத்தின் முன்பதிவுகள் 5 லட்சம் அமெரிக்கா டாலர்களுக்கு நெருங்க ஈன்றது. விஜய், அஜித் படங்களை முந்தி இச்சாதனையை படைத்த படத்தை அசால்ட்டாக தாண்டினார் ரஜினிகாந்த்.

ஜெயிலர் திரைப்படம் ஏற்கனவே அமெரிக்காவில் 5 லட்சம் டாலர்களை வசூலிதுவிட்டது. இந்திய தொகையில் 4 கோடிக்கும் மேல். படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 4 நாட்கள் இருப்பதால் சுலபமாக 10 கோடியை பெற்றுவிடும் என தெரிகிறது. ஒவ்வொரு படத்திலும் எதேனும் ஓர் சாதனையை படைப்பது மற்றும் முறியடிப்பது ரஜினிக்கு வழக்கமாகிவிட்டது. தற்போது வசூலை விட விமர்சன ரீதியான வெற்றியையே நெல்சன் & கோ பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அந்த வெற்றி வசூலை இன்னும் உயர்த்தும்.

Most Popular