Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாஎப்போ தான் ஜெயிலர் புரொமோஷன் ஆரமிப்பீங்க.. ? முதல் பாடல் அறிவிப்பு எப்போது எதிர்பார்க்கலாம்.. !

எப்போ தான் ஜெயிலர் புரொமோஷன் ஆரமிப்பீங்க.. ? முதல் பாடல் அறிவிப்பு எப்போது எதிர்பார்க்கலாம்.. !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நட்சத்திர படையுடன் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினி, மோகன்லால், ஜாக்கி ஷெராப், ஷிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெகும் ரீலீஸ் ஆகவிருக்கிறது.

- Advertisement -

ஓராண்டுக்கு மேல் எந்த ஒரு பெரிய அப்டேட்டும் இல்லாமல் தொடர்ந்த நெல்சன் & கோ அண்மையில் ஷூட்டிங்கை நிறைவு செய்தது. இந்த இடைவேளையில் அவ்வபோது படத்தில் நடிப்பர்வர்களின் போஸ்டர்களும் ஜெயிலர் படத்திற்காக அனிருத் அமைத்துள்ள முத்துவேல் பாண்டியன் தீம் மட்டுமே வந்தது.

ஷூட்டிங் முடிந்த கையோடு விரைந்த போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் துவங்கினர். இந்த வாரம் ரஜினிகாந்த் தன் டப்பிங்கை முடிக்கிறார். ரசிகர்கள் பல நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கும் அந்த பெரிய அறிவிப்பு விரைவில் அவர்களைச் சென்றடையும் என தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளது.

- Advertisement -

ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ஜூன் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூடிய சீக்கிரம் கொடுக்கும். அனிருத் இசையில் வரும் பாடலுக்கு மினிமம் கியாரண்டி நிச்சயம். அதுவும் தலைவர் ரஜினிகாந்த் என்றால் இன்னும் ஸ்பெஷல் தான்.

- Advertisement -

இன்னும் 50 நாட்கள் போலவே பட ரீலீசுக்கு எஞ்சியுள்ளது. அதிலும் முதல் சிங்கிள் ஜூன் 30 என்றால் அப்படல் வெளியாகிய அடுத்த 30 நாட்களில் மற்ற பாடல்கள், இசை வெளியீட்டு விழா, டீஸர், டிரெய்லர், பல்வேறு புரோமோ என அனைத்தும் முடிக்கப்பட வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்கு ரஜினி ரசிகர்களுக்கு விருந்து தான்.

Most Popular