Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெயிலர் திரைப்படம் சுமாராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்… சொன்னது வேற யாரும் இல்ல சூப்பர் ஸ்டார்...

ஜெயிலர் திரைப்படம் சுமாராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்… சொன்னது வேற யாரும் இல்ல சூப்பர் ஸ்டார் தான்.. எங்க தெரியுமா?

தமிழ் சினிமாவில் இருந்து இந்திய சினிமாவில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் ஜெயிலர். இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் எட்டாத உயரத்திற்கு வசூலை வாரி குவித்து இருக்கிறது இந்த திரைப்படம். கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்னதான் ரஜினியின் 2.0 திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்துள்ளது எனக் கூறினாலும், ஜெயிலரின் இந்த இமாலய வெற்றியை ரசிகர்கள் கண்கூட பார்த்து விட்டனர்.

- Advertisement -

எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி பல்வேறு கதைகளை கேட்டு ஆர்வமுடன் நடித்து வந்தாலும், எந்தவொரு திரைப்படமும் அவருக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கான வெற்றியை கொடுக்கவில்லை. காலா, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் பெரியளவு சாதனை படைக்கவில்லை. அதிலும் ரஜினிக்கு கடைசியாக வெளியான தர்பார் அண்ணாத்த திரைப்படங்கள் படு தோல்வியை கொடுத்ததால் மிகுந்த டென்ஷனில் இருந்தார் சூப்பர் ஸ்டார். அவர் திரைத்துறையை விட்டு விலகி இருப்பது நல்லது என்று பலர் கூறியதையும் இங்கு கேட்க முடிந்தது.

இப்படியான சூழலில்தான் நெல்சனின் ஜெய்லர் பட கதையை சூப்பர் ஸ்டார் டிக் செய்தார். ஆனால் அந்த நேரத்தில் பீஸ்ட் பட தோல்வியால் துவண்டு இருந்த நெல்சன் இந்தப் படத்தை ஒழுங்காக எடுப்பாரா என்று கேள்வி எழுந்தது. இருப்பினும் விமர்சனங்களை தூக்கி போட்ட சூப்பர் ஸ்டார் நெல்சன் உடன் இணைந்து ஜெயிலரை கொடுத்தார். இதில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட வெளிமாநில திரை பிரபலங்களும் நடித்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் படம் கடந்த மாதம் வெளியாகி வசூல் மழை பொழிந்தது. படத்தின் இரண்டாம் பாதி சற்று சலிப்பூட்டும் வகையில் இருந்தாலும், சரியான இடங்களில் ரஜினிக்கான மாஸ் காட்சிகளை நெல்சன் வைத்ததால் ஜெயிலர் தப்பித்தது. அதுபோக கன்னட பிரபலம் சிவராஜ் குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லாலிற்கு கிளைமாக்ஸில் மாஸ் காட்சிகளை வைத்ததால், வெளி மாநில ரசிகர்களும் படத்தை ரசித்துப் பார்த்தனர். படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம், ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு காரை பரிசாக வழங்கியது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தை ரீ ரெகார்டிங் இல்லாமல் பார்த்தபோது இது சுமாராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அனிருத்தின் பின்னணி இசையால், படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தேன். இப்போது ஜெயிலரை விட மிகப்பெரிய வெற்றியை எப்படி கொடுக்கப் போகிறோம் என்று டென்ஷனில் இருக்கிறேன் எனப் பேசினார். சூப்பர் ஸ்டாரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular