சினிமா

18 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி – கமல் மோதல்.. ! ஜெயிலர் – இந்தியன் 2 எப்போது தெரியுமா.. ?

Jailer vs Indian 2

2023ஆம் ஆண்டு கோலிவுட்டில் பல பெரிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஜனவரி மாதம் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் – அஜித்தின் மோதல் நடைபெற்றது. மார்ச் மாதம் சிலம்பரசனின் பத்து தல, வெற்றிமாறனின் விடுதலை மோதுகின்றன. அது தவிர்த்து இன்னும் பொன்னியின் செல்வன் 2, லியோ, ஜெயிலர், இந்தியன் 2, அஜித் 62, சூர்யா 42, மாவீரன் என நட்சத்திர நடிகர்களின் படங்களும் உள்ளன.

பொன்னியின் செல்வன் அடுத்த மாதம் இறுதியிலும் மாவீரன் ஜூன் இறுதியிலும் லியோ ஆயுத பூஜைக்கும் வெளியாக காத்திருக்கின்றன. இவையெல்லாம் ரீலீஸ் தேதி கன்பார்ம் ஆன படங்கள். பல கோடி செலவில் 10க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் தயாராகும் சூர்யா 42 திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக திட்டமிட்டுள்ளது. அஜித் 62 படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்கக் காத்திருக்கிறது, பெரும்பாலும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும்.

Advertisement

இந்தியன் 2 – ஜெயிலர் மோதல்

8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் – அஜித் மோதலைக் கண்ட கோலிவுட் ரசிகர்கள் ரஜினி – கமலின் மோதலைக் காணவும் காத்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் படத்தை வெளியிட்டு 18 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இறுதியாக கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் ரஜினியின் சந்திரமுகி மோதின. இவ்வாண்டு இருவரும் மோத வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்குகிறார். படத்தின் அறிவிப்பு வந்த ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் முடித்தப்பாடு இல்லை. இருப்பினும் படக்குழு அயராது தான் உழைத்து வருகிறது. படத்தில் ரஜினிகாந்த்துடன் மோகன்லால், ராக்கி ஷெராப், ஷிவராக்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மிகப் பெரிய பட்டாளம் கொண்ட படம் முதலில் ஏப்ரல் பிறகு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனக் கூறினார், தற்போது தீபாவளியை குறி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

மறுபக்கம் கமலின் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் பல்வேறு சிக்கல்களுக்குப் பின் தற்போது புயல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீட் சிங், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், விவேக் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது, குறிப்பாக சண்டைக் காட்சிகள். இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் படம் என மாற்றி மாற்றி ஓய்வின்றி பணிபுரிந்து வருகிறார். லைகா நிறுவனம் இவ்வளவு வேகமாக முடிக்கச் சொல்வதற்கு தீபாவளி வெளியீடு தான் காரணம். பொங்கலுக்கு அவர்கள் அஜித் 62 படத்தை திட்டமிட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top