Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentதமிழ், தெலுங்கு, இந்தி.. 3 மொழிகளிலும் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!

தமிழ், தெலுங்கு, இந்தி.. 3 மொழிகளிலும் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் ஜோஸ்ட் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா, ரூஹி, குட் லக் செர்ரி, மிலி, பவால் என்று அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஜான்வி கபூர் நடித்த எந்த படமும் ஹிட்டாகாத நிலையிலும், அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் தாயை போலவே பான் இந்தியா நடிகையாக ஜான்வி கபூர் மாறி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஜான்வி கபூர் பதிவிடும் புகைப்படங்கள் அத்தனையும் இளைஞர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்னிக்கை மட்டும் 23.5 மில்லயனாகும்.

அண்மையில் ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் இளம் இயக்குநர் புச்சி பாபு இயக்கவுள்ள ஆர்சி16 படத்திற்கும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இதுமட்டுமல்லாமல் ராகேஷ் மெஹ்ரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். 

- Advertisement -

இதனால் விரைவில் பான் இந்தியா நடிகையாக ஜான்வி கபூர் வலம் வருவார் என்று பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நாயகிகள் யாரும் பெரியளவில் உச்ச நட்சத்திரமாக வரவில்லை. மாறாக நயன்தாரா, ராஷ்மிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் தான் பாலிவுட் படங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஜான்வி கபூர் போட்டியாளராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular