Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஎப்புட்றா.. ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரிக்கும் அட்லீ.. இந்தியில் 1, தெலுங்கில் 1, தமிழில்...

எப்புட்றா.. ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரிக்கும் அட்லீ.. இந்தியில் 1, தெலுங்கில் 1, தமிழில் 2.. ஒரே படத்தால் ஓஹோ லெவலுக்கு சென்ற இயக்குநர்

ஷாரூக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் அதிகமான பிரபலம் கொண்ட இயக்குநராக மாறிவிட்டார். இதனால் இயக்குநர் அட்லீ இனி வரும் காலங்களில் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களையே இயக்குவார் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதனிடையே அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை அட்லீ தயாரிக்க கீ படத்தை இயக்கிய காலீஸ் இயக்கவுள்ளார். இதில் நடிகர் வருண் தவான் நாயகனாகவும், சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ஏமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் வாமிகா கப்பியும் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இயக்குநர் அட்லீ அடுத்தடுத்த படங்களை இயக்குவார் என்று பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஏற்கனவே ஜீவா நடிப்பில் வெளியான சங்கிலி புங்கிலி கதவை திற என்ற படத்தை தயாரித்துள்ளார். அதேபோல் அந்தகாரம் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் 4 படங்களை அடுத்தடுத்து அ ஃபார் ஆப்பிள் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதில், தெறி ரீமேக் முதல் படமாகவும், தெலுங்கில் ஒரு படமும், தமிழில் 2 படத்தையும் தயாரிக்கவுள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார். இதற்கான கதைகளை அட்லீ ஏற்கனவே முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

ஷாரூக் கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கிய அட்லீ ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரிக்கும் அளவிற்கு முன்னேறி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாலிவுட் படத்திற்காக அட்லீ ரூ.30 கோடிக்கும் அதிகமாஅக ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே மும்பையில் வீடு மற்றும் அலுவலகம் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular