Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentநீ ஜெய்ச்சிட்ட அட்லீ..! 1000 கோடியை தொட்ட ஜவான்.. முதல் தமிழ் இயக்குனர் என பெருமை

நீ ஜெய்ச்சிட்ட அட்லீ..! 1000 கோடியை தொட்ட ஜவான்.. முதல் தமிழ் இயக்குனர் என பெருமை

தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு பிளாப் படத்தை கூட கொடுக்காத இயக்குனராக வலம் வருபவர் அட்லி. நடிகர் விஜய் வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லி ரசிகர்களால் அதிக அளவு விமர்சிக்கப்படும் இயக்குனராக இருந்தார்.

- Advertisement -

எனினும் எது குறித்தும் கவலைப்படாமல் தனக்கு என்ன வருமோ அதனை சிறப்பாக செய்வதில் கைத்தேர்ந்தவர் ஆன அட்லி கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்றிருந்தார்.நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை அட்லி இயக்குவதாக இருந்தது.

அப்போது இருந்து அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். தனது மனைவி அமெரிக்காவில் கர்ப்பம் அடைந்த நிலையில் மனைவி அங்கே தனியாக விட்டு படத்திற்காக அட்லி இங்கு வந்தார். இந்த நிலையில் அட்லியின் இந்த உழைப்புக்கு தற்போது மிகப்பெரிய வெற்றி ஒன்று கிடைத்திருக்கிறது.

- Advertisement -

அதாவது ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஹிந்தி சினிமாவில் அதிவேகமாக ஆயிரம் கோடி ரூபாய் தொட்ட திரைப்படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது.

- Advertisement -

இதன் மூலம் தமிழக இயக்குனர் ஒருவர் முதல் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தொட்டது இதுவே முதல் முறை. இதைப் போன்று நடிகர் சாருக் கான் ஏற்கனவே பதான் திரைப்படத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மைல் கல்லை தொட்ட நிலையில் தற்போது ஜவான் மூலம் மீண்டும் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.

இதன் மூலம் ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் தொட்ட ஒரே நடிகர் என்ற பெருமை தற்போது ஷாருக்கான் பெற்றிருக்கிறார். மேலும் அதிக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமையும் ஷாருக்கானுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த வெற்றியை படக் குழு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறது. ஜவான் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது ஹிந்தியில் எந்த ஒரு பெரிய திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதன் காரணமாக ஜமான் திரைப்படம் இன்னும் அதிக வசூலை பெரும் என்று திரைப்பட துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Popular