மகான் படத்திற்கு பின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபிள் X. தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள திரைப்படம் ரசிகர்களிடையே முதல் நாள் பெரியளவில் வரவேற்கப்படவில்லை.
ஆனால் படம் சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் வர தொடங்கிய நிலையில், நேற்று மாலை முதலே ஹவுஸ்புல் காட்சிகளாக நிரம்பி வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி விடுமுறையன்று ஜிகர்தண்டா 2ம் பாகத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேபோல் படத்தின் முதல் பாதி ஆக்ஷன் + காமெடி என்று ரகளையாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி செண்டிமெண்ட் காட்சிகளாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நேற்று கார்த்தி, அனு இம்மானுவேல் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொடூரமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
கார்த்தி திரை வாழ்விலேயே ஜப்பான் படம் அளவிற்கு மோசமான திரைப்படம் இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனால் ஜப்பான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் ஆதரவு இல்லை. விமர்சனங்களும் மோசமாக இருப்பதால், ஜிகர்தண்டா படம் பெரிய்ட ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப ஜிகர்தண்டா படத்திற்கான திரையரங்குகள் மற்றும் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்துள்ள நிலையில், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய படமாக அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன.