Monday, November 4, 2024
- Advertisement -
HomeEntertainmentஇயக்குனர் அவதாரம் எடுக்கும் பாடலாசிரியர் பா.விஜய்… கூட்டணியில் சேரும் ஜீவா, ராஷி கண்ணா.. வில்லன் யாருனு...

இயக்குனர் அவதாரம் எடுக்கும் பாடலாசிரியர் பா.விஜய்… கூட்டணியில் சேரும் ஜீவா, ராஷி கண்ணா.. வில்லன் யாருனு கொஞ்சம் பாருங்க.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

1996 ஆம் ஆண்டு ஞானப்பழம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கவிஞர் பா.விஜய். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 2003 ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் படத்தில் இவர் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் தேசிய விருதை பெற்று தந்தது. தலைநகரம் உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனமும் பா விஜய் எழுதியுள்ளார்.

- Advertisement -

2009ஆம் ஆண்டு வெளியான ஞாபகங்கள் திரைப்படம் மூலம் கதாநாயகனாக இவர் அறிமுகமானார். தொடர்ந்து இளைஞன் மற்றும் தகடு தகடு ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார். இப்படி எழுத்தாளர், கவிஞர், ஹீரோ என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட பா.விஜய் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். விரைவில் அவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளார்.

நடிகர் ஜீவா இப்போது நடிகர் மிர்ச்சி சிவா உடன் இணைந்து கோல்மால் என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்திற்குப் பின்னர் அவர் பாடலாசிரியர் பா.விஜய் படத்தில் இணைந்து செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும், கதாநாயகியாக ராசி கண்ணா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வேல்ஸ் பிலிம் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசரி கணேஷ் இப்போது பல கோடி முதலீட்டில் படங்களை தயாரித்து வருகிறார். ஜெயம் ரவி, ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை 100 கோடி பட்ஜெட் படம், மிர்ச்சி சிவா நடிக்கும் சுமோ உள்ளிட்ட படங்களும் ஐசரி கணேஷ் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Most Popular