Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeEntertainmentவேகமெடுக்கும் இந்தியன் 2 பணிகள்.. டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்.. இயக்குநர் ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்!

வேகமெடுக்கும் இந்தியன் 2 பணிகள்.. டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்.. இயக்குநர் ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்!

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படத்தின் பணிகளை தீவிரமாக்கினார். ஹெச்.வினோத் உடனான படம், மணிரத்னம் உடனான படம் என்று கமல்ஹாசன் பிஸியாக நடிக்க முடிவு செய்தார். இதனிடையே விக்ரம் படத்தின் மெகா வெற்றி, இந்தியா – 2 படத்தின் பணிகளும் மீண்டும் தொடங்க காரணமாக அமைந்தது.

- Advertisement -

ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தலையிட்டு இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையில் சமாதானம் செய்தது. இதனால் இயக்குநர் ஷங்கர் மீண்டும் இந்தியன் 2 படத்தை இயக்க பணிகளை தொடங்கினார். 15 நாட்கள் இந்தியன் 2 படத்தின் பணிகளையும், 15 நாட்கள் கேம் சேஞ்சர் படத்தின் பணிகளிலும் ஷங்கர் ஈடுபட்டார்.

இதன் காரணமாக இந்தியன் 2 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரின் தேதிகள் உடனடியாக பெறப்பட்டு படத்தின் ஷூட்டிங்கை விரைந்து முடித்தார் இயக்குநர் ஷங்கர். அதுமட்டுமல்லாமல் படம் பற்றி அப்டேட்டும் சீரான இடைவெளியில் வழங்கப்பட்டது.

- Advertisement -

இதனிடையே இந்தியன் 2 படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கர் உச்சி முகர்ந்து பாராட்டி வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார். இதனால் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் இருவரும் டப்பிங் பணிகளில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனால் இந்திய 2 திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு நிச்சயம் வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான இசை பணிகளையும் இசையமைப்பாளர் அனிருத் தொடங்கி மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே பாடல்கள் பணிகளை முடித்துள்ள அனிருத், பிஜிஎம் பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular