Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentஅல்லு அர்ஜுனுடன் ஆட்டம் போடும் சூர்யா பட நடிகை.. பான் இந்தியா நடிகையான திட்டமாம்.. அப்போ...

அல்லு அர்ஜுனுடன் ஆட்டம் போடும் சூர்யா பட நடிகை.. பான் இந்தியா நடிகையான திட்டமாம்.. அப்போ சமந்தா, ராஷ்மிகா எங்க போவாங்க!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்த திரைப்படம், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் புதிய அனுபவத்தை கொடுத்தது.

- Advertisement -

இந்த படத்தில் நடிகை சமந்தா நடனமாடிய ஊ சொல்றீயா மாமா பாடல் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. இந்த பாடலின் மூலமாக மீண்டும் பிரபல நடிகையை வைத்து நடனமாடும் ஐட்டம் டான்ஸ் நம்பர் பிரபலமாகியது. இந்த ட்ரெண்டை பயன்படுத்தி காவாலா, ராவடி, கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களிலும் டான்ஸ் நம்பர் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. நடப்பாண்டில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடிவடையும். இந்த படத்திலும் மீண்டும் ஒரு குத்துப்பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலுக்கு சமந்தாவிடம் நடனமாட கோரிய போது, அவர் மறுத்துவிட்டார்.

- Advertisement -

இதனால் புஷ்பா 2 படக்குழு ஸ்ரீலீலாவை ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் பாலிவுட் ரசிகர்களை கனெக்ட் செய்வதற்காக திஷா படானியை புஷ்பா படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. தோனி படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமான திஷா படானி, அதன்பின் ஏக் வில்லன் 2, ராதே, பாஷி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

- Advertisement -

தற்போது தெலுங்கில் கல்கி, தமிழில் கங்குவா படங்களில் நடித்து வரும் திஷா படானி அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் புஷ்பா 2 படத்தில் சிறப்பு நடனம் ஆடுவதன் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய முடியும் என்று எதிர்பார்த்துள்ளார். அதன்பின் தெலுங்கு, தமிழ் மொழிகளில் சில படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Most Popular