Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainment”கங்குவா” படமும் ரூ.400 கோடி பண்ணும் பாருங்க.. சல்லிய சல்லியா நொறுக்கும் தனஞ்செயன்.. இந்த ஆள்...

”கங்குவா” படமும் ரூ.400 கோடி பண்ணும் பாருங்க.. சல்லிய சல்லியா நொறுக்கும் தனஞ்செயன்.. இந்த ஆள் பேச்ச நிப்பாட்ட சொல்லுங்கங்க!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஷுட்டிங் நடைபெற்ற ‘வணங்கான்’ படத்தில் இருந்து சில காரணங்களால் நடிகர் சூர்யா விலகினார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 42வது பட அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்னும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானியும் காமெடி கேரக்டரில் யோகி பாபு, கோவை சரளாவும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கொடைக்கானல் வனப்பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. இந்தப் படம் தற்போதைய காலத்துக்கும், முந்தைய பிறவிக்கும் உள்ள தொடர்புதான் கங்குவா கதைக்களம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -
Director siva about kanguva

இந்த நிலையில் கங்குவா படத்தில் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. ஹாலிவுட் தரப்பில் தயாராகி வரும் கங்குவா நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்று சினிமா உலகமே பாராட்டி வருகிறது. மிரட்டலான லுக்கில் சூர்யா இருப்பதும் படத்திற்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் கங்குவா திரைப்படம் பற்றி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தனஞ்செயன், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் சமகால காட்சிகளும் கொஞ்சமாகவும், வரலாற்று காட்சிகள் அதிகமாகவும் உள்ளது. இதனால் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கங்குவா பெரும் ஹிட்டடிக்கும்.

பாகுபலி, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் படங்களை போல் கங்குவா பெரிய வசூலை குவிக்கும். அந்த படங்களால் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் போது பாலிவுட்டிலும் வியந்து பார்க்கப்படும் சூர்யாவால் ரூ.400 கோடி வசூலை குவிக்க முடியாதா என்று கூறியுள்ளார். இவரது பேச்சு ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

Most Popular