தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. பருத்தி வீரனில் தொடங்கி கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரை அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம், படத்திற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சி என அனைத்துமே ரசிகர்கள் பேசக் கூடிய வகையில் இருப்பதால், கார்த்தியை கோலிவுட் திரையுலகம் கொண்டாடி வருகிறது. ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி என கார்த்தியின் வெற்றியை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கோலிவுட்டில் மற்ற நடிகர்களுக்கும் இல்லாத சிறப்பும் கார்த்திக்கு என்ன தனியாக உண்டு. கிட்டத்தட்ட 25வது படத்தில் இருக்கும் கார்த்தி, தமிழ் திரைப்படம் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இயக்குனர் முத்தையாவிடம் மட்டும் கொம்பன், விரும்பன் என இரண்டு திரைப்படங்களின் நடித்த அவர், மற்ற இயக்குனர்களுடன் ஒரே ஒரு படத்தை மட்டும் நடித்து பலரையும் கவனிக்க வைத்தார். இதில் முத்தையா இயக்கத்தில் அவர் நடித்த கொம்பன் திரைப்படம் வசூலை வாரி குவித்தது.
பருத்திவீரன் பாணியிலான கிராமத்துக் கதைக்களத்தை அவர் மீண்டும் தேர்வு செய்து இருந்தாலும், மாமனார் மருமகன் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கப்பட்டதால் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டன. இப்படி கொம்பன் படத்தில் மீசையை முறுக்கி மிரட்டிய கார்த்தி, அடுத்த திரைப்படத்திலேயே பக்கா வடசென்னை இளைஞராக மெட்ராஸ் படத்தில் வந்து நின்றார். பா ரஞ்சித் எழுதிய இயக்கிய இந்த திரைப்படம், கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
தற்போது ஜப்பான் திரைப்படத்தின் மூலம் தனது 25வது படத்தை நெருங்கி இருக்கிறார் கார்த்தி. ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் பட இயக்குனர் நலன்குமாரசாமியுடன் கார்த்தி கைகோர்த்துள்ளார்.
முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படத்தில், சத்யராஜ் இடம் பெறுவதாக தகவல் வெளியானது. தற்போது ராஜ்கிரணும் படத்தில் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொம்பன் படத்தில், கார்த்தி ராஜ்கிரண் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால், நலன் குமாரசாமி படத்தின் மீதானதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.