Saturday, November 23, 2024
- Advertisement -
HomeEntertainmentஜப்பான் இசை வெளியீட்டு விழா.. நேரு ஸ்டேடியத்தில் நடக்கப் போகும் பிரம்மாண்டம்.. தளபதியால் முடியாததை சாதித்த...

ஜப்பான் இசை வெளியீட்டு விழா.. நேரு ஸ்டேடியத்தில் நடக்கப் போகும் பிரம்மாண்டம்.. தளபதியால் முடியாததை சாதித்த கார்த்தி!

பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கார்த்தி, அடுத்தடுத்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ் என்று ஹிட் மேல் ஹிட் கொடுத்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அதன்பின் தோழா, கைதி, பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் என்று ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுத்து தெலுங்கு சினிமாவிலும் பெரிய ஹீரோக்களில் ஒருவரானார்.

- Advertisement -

ஜனரஞ்சகமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டுப்போட்டுள்ள கார்த்தி, தற்போது 25வது படத்தில் நடித்து முடித்துள்ளார். குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூ முருகன் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அனு இம்மானுவல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அண்மையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான தோரணையில் கார்த்தி டப்பிங் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஜப்பான் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜப்பான் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜப்பான் படத்தின் விளம்பரப் பணிகளை பிரம்மாண்டமாக தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

- Advertisement -

ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விஜய், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரின் இசை வெளியீட்டு விழாக்கள் மட்டுமே நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் விஜயின் லியோ இசை வெளியீட்டு விழா ரத்த் செய்யப்பட்ட நிலையில், முதல்முறையாக கார்த்தி படத்திற்கு பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடப்பது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Most Popular