Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentசிம்புவின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்.. STR48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டேவை...

சிம்புவின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்.. STR48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டேவை தூக்கிய STR!

ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என்று அடுத்தடுத்து பிரம்மாண்ட ஹிட் படங்களில் நடித்து மீண்டும் உச்ச நடிகராக மாறினார் சிலம்பரசன். செக்க சிவந்த வானம் படத்தில் குண்டாக நடித்து சிம்புவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 வெற்றி படங்களை கொடுத்து அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த படம் சிம்புவின் 48வது படம் என்பதால் எஸ்டிஆர் 48 என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது.

சிம்புவை நம்பி பிரம்மாண்ட பொருட்செலவில் படமெடுத்து கமல்ஹாசன் ரிஸ்க் எடுப்பதாக சில பேர் விமர்சித்தனர். ஆனால் சிம்புவை வைத்து அந்த படத்தை தயாரிப்பதில் கமல்ஹாசன் தீவிரமாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் படத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பை கொண்டு வருவதோடு, அதிக முடி, ஷார்ப்பான தாடி என்று லுக்கையும் ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளார்.

- Advertisement -

இதற்கான ஏற்கனவே தாய்லாந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வந்த சிம்பு, இப்போது துபாயில் பயிற்சி பெற்று வருகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் படத்தினை 2டியில் உருவாக்கி படக்குழு ஆய்வு செய்து வருகிறது. அதன்பின் அதனை கிராஃபிக்ஸில் எப்படி காண்பிக்கலாம், எந்த வகையில் அரங்குகள் அமைத்து செட் அமைக்கலாம் என்று படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது.

- Advertisement -

ராஜ்கமல் நிறுவனத்தில் எஸ்டிஆர் 48 படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் பிரத்யேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த படம் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நம்பிக்கையில் சிம்புவும் மற்ற படங்களில் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாள் வரும் பிப்.3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் எஸ்டிஆர் 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. அதன்பின் பிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular