Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentஉண்மையாவா? தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமிமேனன்.. அசத்தலான கூட்டணியுடன் புதிய அப்டேட்!

உண்மையாவா? தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமிமேனன்.. அசத்தலான கூட்டணியுடன் புதிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் லட்சுமி மேனன். இவர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2012ம் வருடம் வெளியாகிய சுந்தர பாண்டியன் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானார். அதன்பின் இவர் கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி என அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்த லட்சுமி மேனன் அதன் பிறகு பட வாய்ப்புகளின்றி சினிமா துறையை விட்டு விலகி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு, கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி வருகிறது. இதே போல் அறிவழகன் இயக்கும் சப்தம் திரைப்படத்திலும் நடிகை லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஈரம் திரைப்படம் மூலம் அறிவழகன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். ஆதி நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வல்லினம், ஆறாவது சினம் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்கள் மூலம் அறிவழகன் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். குறிப்பாக அவர் அருண் விஜயுடன் இணைந்து பணியாற்றிய குற்றம் 23 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் மீண்டும் அருண் விஜயுடன் இணைந்து அவர் பார்டர் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் ஆகாமல் போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, அறிவழகன் ஈரம் படத்தில் நடித்த ஆதியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப்படத்திற்கு ‘சப்தம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘ஈரம்’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

- Advertisement -

இப்படத்தை இயக்குநர் அறிவழகனே தயாரிக்கிறார். ‘ஈரம்’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. மூணாறில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், லட்சுமி மேனன் சப்தம் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் வாயிலாக லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular