Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாபொங்கல் பந்தயத்திலிருந்து பயந்து ஓடிய ரஜினி.. தனுஷ், சிவகார்த்திகேயனால் ஓட்டம் எடுத்த லால் சலாம்

பொங்கல் பந்தயத்திலிருந்து பயந்து ஓடிய ரஜினி.. தனுஷ், சிவகார்த்திகேயனால் ஓட்டம் எடுத்த லால் சலாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்று திரைப்படம் வெளிவர இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் என்று தான் ரசிகர்கள் கூடி வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் உண்மை இந்த திரைப்படத்தில் விக்ரம் மற்றும் விஷ்ணு விஷால் இவர்கள்தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் வருகின்ற பொங்கலுக்கு எதிர்பாராத விதமாக நடிகர் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியிடப்பட முடிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே இந்த மாதமே வெளியிடப்பட இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

- Advertisement -

ஒரு சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்பொழுது பொங்கலுக்கு வெளியிடலாம் என்று பட குழுவினர்கள் முடிவு செய்து அறிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் லால் சலாம் திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் வருகின்ற பொங்கலுக்கு அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் ஒன் என்ற திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது. இவற்றின் காரணங்களால் லால் சலாம் திரைப்படத்தை உங்களுக்கு வெளியிடப்படாமல் ஒத்தி வைக்க முடிவு செய்திருக்கிறது.

இந்த இடத்தில் லால் சலாம் பட குழுவினர்கள் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஒருவகையில் இப்படி கூறி ஆறுதல் படுத்திக் கொண்டாலும் சூப்பர் ஸ்டார் நடித்து திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படவில்லை என்ற வருத்தமும் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

இதேபோல் வருகின்ற பொங்கலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மேரி கிறிஸ்மஸ் என்ற திரைப்படமும் ஹிந்தி மற்றும் தமிழில் வெளியிடப்பட இருக்கிறது.

இப்படி நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கும் காரணத்தால் இந்த சமயத்தில் லால் சலாம் திரைப்படம் வெளியிடுவது சரியில்லை என்பதை புரிந்து கொண்ட படபிடிப்பு என்று சரியான நேரத்திற்காக திரைப்படத்தை தாமதமாக வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.

Most Popular