Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாவசூலில் முக்கும் ரஜினியின் லால் சலாம்.. 5 நாட்கள் முடிவில் லவ்வர் - லால் சலாம்...

வசூலில் முக்கும் ரஜினியின் லால் சலாம்.. 5 நாட்கள் முடிவில் லவ்வர் – லால் சலாம் வசூல் விவரம்.. !

இந்த மாதம் தமிழில் தலைவர் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படமும் மணிகண்டனின் லவ்வர் படமும் திரையரங்கில் மோதின.

- Advertisement -

மகள் ஐஷ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையை போற்றும் விதத்தில் கதைக்களம் அமைந்துள்ளது. படம் விமர்சன ரீதியாக மிகவும் சுமார் தான். மக்களிடம் பெரிதாக எந்த வித உற்சாகமும் இல்லை.

படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, நிரோஷா உட்பட்ட பலர் நடித்திருந்தனர். இருப்பினும் படக்குழு முழுக்க முழுக்க ரஜினியின் கவுரவ தோற்றத்தை காட்டியே புரொமோஷன் செய்தது. ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த கூட்டம் தியேட்டர்களுக்கு வரவில்லை.

- Advertisement -

முதல் நாள் வசூல் மிகவும் பெரிதாக இருக்கும். ஆனால் இவ்வளவு பெரிய படத்துக்கு உலகளவிலேயே 5 கோடிக்கு கீழ் தான் முதல் நாள் வசூலாகியுள்ளது. ஐந்து நாட்கள் முடிவில் 20 கோடியில் நிற்கிறது லால் சலாம். இது ரஜினியின் பெயருக்கு பின்னால் இருப்பது அவருக்கு தான் சங்கடம்.

- Advertisement -

மறுபக்கம் போட்டியாக வந்த லவ்வர் திரைப்படம் மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் எதிர்பார்த்ததை ஈட்ட முடியவில்லை. மணிகண்டன் – ஶ்ரீ கவுரி பிரியா ஜோடிக்கு இடையே நடக்கும் சண்டைகளில் ஆன் எதையெல்லாம் தவிர்ப்பது இந்தக் காலத்தில் காதலை வலுப்படுத்தும் என்பதை தவுறுகளின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளது இப்படம்.

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் மிகவும் அருமையாக எழுதியுள்ளார். ஷான் ரோல்டனின் இசை மேலும் பலத்தை ஊட்டுகிறது. என்னதான் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை 3.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. நாளுக்கு நாள் படத்திற்கு வருகை தருகின்றனர் மக்கள். காதலர்கள் தினமான இன்று தான் இப்படத்துக்கு வசூலில் அதிகபட்ச லாபம் பதிவாகியுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் நிச்சயம் நல்ல வசூலில் முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சனங்கள் நல்லபடியாக வந்துள்ளதால் ஓடிடி விற்பனை நல்ல தொகைக்கு போகும்.

Most Popular