Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினிக்கு வந்த சோகம்.. பத்து நாள் வசூல் சேர்த்தாலும் லியோவின் ஒரு நாள் வசூலைக் கடக்கவில்லை.....

ரஜினிக்கு வந்த சோகம்.. பத்து நாள் வசூல் சேர்த்தாலும் லியோவின் ஒரு நாள் வசூலைக் கடக்கவில்லை.. லால் சலாம் அட்டார் பிளாப் !

கடந்த வாரம் தமிழில் லால் சலாம் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இதில் ரஜினிகாந்த் மகள் இயக்கிய லால் சலாம் படம் பெரிய படமாக அமைந்தாலும் துவக்கம் முதலே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வெளியானது.

- Advertisement -

லால் சலாம் படத்தின் கதைக்களம் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையைப் போற்றுவதைப் பற்றி அமைந்திருந்தது. இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து பேசினார். இருந்தாலும் எந்த ஒரு ஆதரவும் படத்துக்கு கிடைக்கவில்லை.

இந்தப் படத்தை துவக்கம் முதலே ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் என்று தான் விளம்பரம் செய்தனர். ஆனால் படத்தின் ரஜினிகாந்த் 40 நிமிடங்களுக்கு அருகில் வருவார். இரண்டாவது ஹீரோவாக வரும் விக்ராந்த் 15 நிமிடம் தான் திரையில் வருகிறார். அதனால் இப்பத்தில் ரஜினி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதே தவறு.

- Advertisement -

சூப்பர்ஸ்டார் படம் என்பதால் முதல் நாள் மட்டும் 3 கோடி வசூல் ஆனது. பிறகு அடுத்த 8 நாட்கள் மொத்தமாக சேர்த்தே 11 கோடி தான். இன்னுமும் படம் 15 கோடிகள் தாண்ட முக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று விடுமுறையில் கூட தமிழகம் முழுக்க அனைத்து காட்சிகளிலும் அதிகபட்சமாக 20% டிக்கெட்டுகள் தன விற்கபட்டதாக தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இசை வெளியீட்டு விழா முதல் இப்போது வரை இந்தப் படத்தை இணையத்தில் ஓட்டித் தல்லுகின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பா.ஜா.கா கட்சிக்கு ஆதரவை அளிக்கும் வகையில் அவரது நடத்தை இருப்பதாக சொல்லி நெட்டிசன்களும் மக்களும் களாய்தனர்.

ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த சூப்பர்ஸ்டார் உடனே சில வாரங்களில் வட இந்தியாவுக்கு சென்று ஒரு பா.ஜா.கா யோகியின் காலில் விழுந்தார். அது நம் மக்கள் மத்தியில் பெரிய கோபத்தை உண்டாக்கி ரஜினியின் மேல் இருந்த மரியாதையும் குறைத்தது.

இதனை சரி செய்ய, இசைவெளியீட்டு விழாவில் தன் அப்பா சங்கி இல்லை என அழுத்தமாக கூறினார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த். இதற்கு இணையத்தில், “ தன் அப்பா சங்கி இல்லை எனக் கூறுவதற்காக ஒரு படமே எடுத்துள்ளார் பாருங்க ” என நெட்டிசன்கள் நக்கல் செய்தனர். படமும் பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கும் அளவில் இல்லாமல், சுமாரான திரைக்கதையுடன் அமைந்ததால் பிளாப் ஆகியுள்ளது.

Most Popular