Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentலால் சலாம் முதல் மெர்ரி கிறிஸ்துமஸ் வரை.. மார்ச் 8 ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்.. முழு...

லால் சலாம் முதல் மெர்ரி கிறிஸ்துமஸ் வரை.. மார்ச் 8 ஓடிடி-யில் ரிலீஸாகும் படங்கள்.. முழு விவரம் இங்கே!

தமிழ் சினிமாவில் 28 நாட்களுக்கு பின்னரும், பாலிவுட் படங்களில் 7 வாரங்களுக்கு பின்னரும் ஓடிடியில் ரிலீஸாகி வருகின்றன. அந்த வகையில் பொங்கல் முதல் பிப்ரவரி முதல் வாரம் வரை திரையரங்குகளில் ரிலீஸான ஏராளமான படங்கள் மார்ச் 8ஆம் தேதி ஓடிடி-யில் ரிலீஸாகின்றன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளிலும் படங்கள் ரிலீஸாகின்றன.

- Advertisement -

குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாகிறது. அதேபோல் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்த லால் சலாம் திரைப்படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அதேபோல் ரஜினிகாந்த் படத்துடன் சேர்ந்து களமிறங்கி வெற்றிபெற்ற மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் மார்ச் 8 ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகிறது. 

இதுமட்டுமல்லாமல் விதார்த், பூர்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டெவில் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியிலும், நந்திவர்மன் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியிலும் ரிலீஸாகிறது. அதேபோல் தமிழில் வெளியான தூக்குதுரை திரைப்படம் சிம்ப்லி சவுத் ஓடிடியில் ரிலீஸாகிறது. இதேபோல் பொங்கலின் போது பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றிபெற ஹனுமான் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகிறது.

- Advertisement -

அதேபோல் தெலுங்கு படங்களாக சவுண்ட் பார்ட் படம் ஆஹா ஓடிடியிலும், ஜீவா நடிப்பில் வெளியான யாத்ரா 2 திரைப்படம் அமேஸான் ப்ரைம் ஓடிடியிலும் ரிலீஸாகிறது. இதுமட்டுமல்லாமல் இந்தியில் வெளியான ஷோ டைம் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகிறது. அதேபோல் ஹூமா குரேஷி நடிப்பில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிய மகாரானி இணைய தொடரின் 3வது சீசன் வெளியாகிறது.

- Advertisement -

மார்ச் 8ஆம் தேதியில் மட்டும் கிட்டத்தட்ட 5க்கும் அதிகமான தமிழ் படங்கள், 4க்கும் அதிகமான தெலுங்கு படங்கள், இணையத் தொடர்கள், பாலிவுட் படங்கள் உள்ளிட்டவை வெளியாகுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான படங்கள் திரையரங்குகள் வெற்றிபெறாததால், ஓடிடியில் அதிகளவிலான ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular