Tuesday, April 30, 2024
- Advertisement -
Homeசினிமாதனுஷ் பட இயக்குனருடன் சேரும் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி.. சம்பவம் விரைவில்.. !

தனுஷ் பட இயக்குனருடன் சேரும் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி.. சம்பவம் விரைவில்.. !

லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அன்னாசி சரவணா சினிமாவில் நடிக்க வேண்டுமென மிகவும் ஆசைப்பட்டார். கடந்த ஆண்டு தனது தயாரிப்பிலேயே கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். படத்தின் பெயரும் லெஜன்ட் எனவே தலைப்பிட்டார்.

- Advertisement -

ஜே.டி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கிய முதல் படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஊர்வசி நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இவரது படத்தை யார் காசு செலவு செய்து பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் நன்றாகவே ஓடியது.

ஓடிடியில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. முதல் படம் வெளியான உடனே தன் அடுத்த படத்தை துவங்குவதாக அறிவித்தார். ஆனால் அதற்கான பணிகளை எதுவும் மேற்கொள்ளவில்லை. அண்மையில் புதிய கெட்டப்பில் சில ஃபோட்டோக்கள் வெளியிட்டார். ஒரு வேளை அது அடுத்தப் படத்திற்கான லுக்காக கூட இருக்கலாம்.

- Advertisement -

தற்போது கிடைத்துள்ள செய்திகளின் படி, லெஜன்ட் சரவணா அவர்களின் அடுத்தப் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு என இரு சிவகார்த்திகேயன் படங்களையும் இரு தனுஷ் படங்களையும் இயக்கியுள்ளார் இந்த இயக்குனர்.

- Advertisement -

இதில் முதல் இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. தனுஷை வைத்து எடுத்த படங்கள் எதிர்பார்ப்பை மிஞ்சவில்லை. இம்முறை லெஜன்ட் சரவணாவை வைத்து இயக்கும் படத்தில் பழைய ஃபார்மை பிடிக்க நினைப்பார். இப்படத்தையும் சரவணாவே தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். படத்தின் மற்ற நடிகர்கள், இசையமைப்பாளர் என மற்ற பணிகள் எதுவும் ஆரம்பிக்கவில்லை. படத்தின் கதையைக் கேட்டு இயக்குனர் துரை செந்தில்குமாரை உறுதி செய்யப்பட்டுள்ளார். மிச்ச வேலைகள் இனி தான்.

Most Popular