Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. 2023ஆம் ஆண்டில் வசூலில் நம்பர் 1 இடம்

ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. 2023ஆம் ஆண்டில் வசூலில் நம்பர் 1 இடம்

தமிழ் சினிமாவில் நடப்பாண்டில் இரண்டு மிகப்பெரிய படங்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம் ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி விஜயை மறைமுகமாக தாக்கிப் பேசியது தான்.

- Advertisement -

இதனால் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து இந்த ஆண்டு வசூலில் ஜெயிலர் முதலிடம் பிடித்ததா இல்லை லியோ முதலிடம் இருக்கிறதா என இரு தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 610 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது அதனை லியோ முறியடித்து விட்டது. ஆந்திரா மற்றும் கர்நாடகா தவிர மற்ற இடங்களில் எல்லாம் லியோ தான் முதலிடம் பிடித்திருக்கிறது.

- Advertisement -

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஜெய்லர் திரைப்படம் லியோவை விட அதிக வசூல் பெற்றது. இதற்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர நடிகர்கள் மாசான காட்சியின் நடித்திருந்தார்கள். ஆனால் லியோனில் அர்ஜுன், சஞ்சய்தத் ஆகியோர் மட்டுமே விஜய் உடன் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் லியோ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 225 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்து பொன்னியின் செல்வன் ரெக்கார்டை முறியடித்து இருக்கிறது. இதன் மூலம் தமிழக திரையரங்குகளில் அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்று இருக்கிறது.

தமிழகத்தில் ஜெயிலர் 194 கோடி தான் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கேரளாவில் 60 கோடி ரூபாயும் ஆந்திராவில் 45 முதல் 50 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 40 முதல் 50 கோடி ரூபாயும், வட இந்தியாவில் 40-45 கோடி ரூபாயும்,லியோ வசூல் சாதனை செய்திருந்தது.

இந்தியா தவிர உலகம் முழுவதும் 205 முதல் 210 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது. இதன் மூலம் லியோ திரைப்படம் ஒட்டு மொத்தமாக 615 முதல் 620 கோடி ரூபாய் வசூல் நிகழ்த்தி இருக்கிறது. இது ஜெயிலரை விட அதிகமாகும்.

இதன் மூலம் நடப்பாண்டில் அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்றிருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளிக்கு வெளியான ஜப்பான் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றிருப்பதால் லியோ திரைப்படத்திற்கு அது ஜாக்பாட் ஆக அமைந்திருக்கிறது. இதனால் பல்வேறு திரையரங்குகளில் லியோ திரைப்படம் போட்டப்பட்டு வருகிறது.

Most Popular