Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெயிலரை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த லியோ… ஒரே வாரத்தில் இத்தனை கோடி ரூபாய் வசூல்…...

ஜெயிலரை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த லியோ… ஒரே வாரத்தில் இத்தனை கோடி ரூபாய் வசூல்… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு…

தளபதி விஜய்க்கு கடைசியாக வெளியான பீஸ்ட் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தையே கொடுத்தன. வசூல் ரீதியாக இந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் அவை பாக்ஸ் ஆபீஸில் என்னமோ எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இப்படியான சூழலில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்தார் விஜய். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க சஞ்சய்தத், திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர்.

- Advertisement -

பிப்ரவரி மாதம் இதன் சூட்டிங் தொடங்கிய போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. எல் சி யு கான்செப்ட் இதில் வருமா என்று லோகேஷ் கனகராஜ் சென்று இடத்தில் எல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியான சூழலில் கடந்த வியாழக்கிழமை லியோ திரைப்படம் வெளியானது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூட, ஆட்டம் பாட்டம் என லியோ ரிலீஸ் களைகட்டியது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் முதல் பாதி மிக நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக உள்ளது என்றும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. அதேசமயம், மிக நன்றாக உள்ளது என்றும் இன்னொரு தரப்பினர் கூறினர். இமாச்சல பிரதேசத்தில் தனது குடும்பத்தினருடன் பார்த்திபன் எனும் கதாபாத்திரத்தில் அமைதியாக வாழ்கிறார் விஜய். அவர் வைத்திருக்கும் காபி ஷாப்பிற்கு வரும் ஒரு கொள்ளை கும்பல் அவரது மகளை கொல்ல துடிக்க, அவர்களை சுட்டுக் கொள்கிறார் பார்த்திபன். இதன் மூலம் அவரது முகம் வெளி உலகத்திற்கு தெரிய வர, அவர்தான் லியோ என்று ஒரு போதை கும்பல் பார்த்திபனை பின் தொடர்கிறது.

- Advertisement -

உண்மையில் அவர்தான் லியோவா, பார்த்திபனை வில்லன் கும்பல் துரத்த காரணம் என்ன என்ற கேள்விகளுக்கு இரண்டு மணி நேரம் 45 நிமிடங்களும் சுவாரசியமாக பதில் கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். படம் எதிர்பார்த்த அளவுக்கு இருந்தாலும், இதை எல்சியு கான்செப்ட் மட்டும் தேவையில்லாத ஆணி என்று சிலர் தெரிவித்தனர். இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆன வியாழக்கிழமை அன்று, 148 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

- Advertisement -

ஆனால் அதன் பிறகு வசூல் நிலவரம் அறிவிப்பை லலித்குமார் வெளியிடவே இல்லை. அதேசமயம் லியோ கலவையான விமர்சனத்தை பெற்றிருப்பதால், இரண்டாம் நாள் வசூல் பாதியாக குறைந்ததாகவும், மூன்றாம் நாள் நான்காம் நாள் வசூல் அந்த அளவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றும் சில சினிமா விமர்சனங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்திருக்க, லியோ படத்தின் வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம், ஒரே வாரத்தில் 345 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் வசூலை தற்போது லியோ முறியடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

Most Popular