Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ ஒரு மாதம் முன்பே படைத்த சாதனை.. கேரளாவில் புதிய வசூல் சாதனை

லியோ ஒரு மாதம் முன்பே படைத்த சாதனை.. கேரளாவில் புதிய வசூல் சாதனை

தமிழ் சினிமாவில் நடப்பாண்டில் ஜெய்லருக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க திரைப்படம் என்றால் அது லியோ  தான். இன்னும் சொல்லப்போனால் ஜெயிலர் படைத்த சாதனையை லியோ முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் தமிழ் சினிமாவில் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை படைக்கும் திரைப்படமாக லியோ இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த மைல்கல்லை நோக்கி போகும் வகையில் தற்போது பல்வேறு இடங்களில் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

பிரிட்டனில் ஏற்கனவே லியோ படத்ததற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 20 ஆயிரம் பேர் டிக்கெட்டை முன் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் மிகப்பெரிய திரையான ஐ மேக்சிலும் லியோ திரைப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் லியோ முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர் மன்ற காட்சிக்கான சுமார் ஒரு லட்சம் முன்பதிவு டிக்கெட் விற்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு லியோ திரைப்படம் கேரளாவில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. இதேபோன்று லியோ திரைப்படத்தை அமெரிக்கா மற்றும் கனடாவில் 18 கோடி ரூபாய் கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது விஜய் படத்திற்கு விற்கப்பட்டதிலே அதிக தொகை என்றும் கூறப்படுகிறது. லியோ திரைப்படம் மற்ற மாநிலங்களிலும் அதிகம் வசூல் பெற வேண்டும் என்பதற்காக தற்போது அனைத்து மொழிகளிலும் போஸ்டர் ரிலீஸ் செய்யப்படுகிறது.

நேற்று தெலுங்கில் போஸ்டர் ரிலீஸ் ஆன நிலையில் இன்று ஹிந்தியில் போஸ்டர் வெளிவர இருக்கிறது. நேற்று keep calm and avoid the battle என்ற வார்த்தையில் போஸ்டர் ரிலீஸ் ஆனது. அதற்கான விளக்கம் இன்றைய போஸ்டரில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Most Popular