Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentஎன்னது லியோ கேங்ஸ்டர் படம் இல்லையா… வச்சாரு பாருயா லோகேஷ் கனகராஜ் ஆப்பு!

என்னது லியோ கேங்ஸ்டர் படம் இல்லையா… வச்சாரு பாருயா லோகேஷ் கனகராஜ் ஆப்பு!

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இதில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

காஷ்மீரில் தொடங்கிய படப்பிடிப்பு

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. இதற்காக ஒட்டுமொத்த பட குழுவினரும் விமானத்தில் காஷ்மீர் செல்லும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல் காஷ்மீரில் 100 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பை வீடியோவாக தயாரித்து வெளியிட்டு படக்குழு நிறுவனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. காஷ்மீரைத் தொடர்ந்து தற்போது சென்னையில் லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் திரிஷா அர்ஜுன் தொடர்பான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

எல்சியுவில் வருமா லியோ?

லியோ திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே, அந்தத் திரைப்படம் எல் சி யு வில் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கார்த்தியின் கைதி படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ், அதில் உள்ள சில முடிச்சுகளை விக்ரம் படத்திலும் தொடர்ந்து வந்தார். குறிப்பாக இறுதி காட்சியில் சூர்யா, ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அறிமுகமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜின் இந்த எல் சி யு – யுக்தி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது விஜயின் லியோ திரைப்படமும் எல் சி யு வாகவே இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக தினமும் சமூக வலைதளத்தில் ஏதாவது ஒரு பதிவை இடும் அவர்கள், லோகேஷ் கனகராஜன் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

எதிர்பார்ப்பை தூண்டும் நா ரெடி பாடல்

நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் பிறந்தநாள் அன்று முதல் பாடல் வெளியாகும் என பட குழு அறிவித்தது. நா ரெடி என தொடங்கும் அந்த பாடலை, விஜய் பாடியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த பாடலுக்காக, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கான முன்னோட்ட வீடியோவும் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டிள்ளது.

- Advertisement -

கேங்ஸ்டர் படம் இல்லையா லியோ

லியோ படத்திலிருந்து நாளுக்கு நாள் புதிய தகவல் வெளியாக வரும் நிலையில் தற்போது கேங்ஸ்டர் படம் மட்டும் இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் தந்தை மகன் பாசத்திற்கான அதிக எமோஷன் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கைதி படத்தில் தந்தை மகள் பாசத்தை வேறொரு பரிமாணத்தில் காட்சிப்படுத்தியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

விக்ரமின் தாத்தா பேரன் பாச காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது அதே பாணியை லோகேஷ் கனகராஜ் பின்பற்றுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Most Popular