Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமா2000 கலைஞர்கள் பங்கேற்கும் லியோ பாடல்.. அனிரூத்தின் மாஸ் சாங் ரெடி

2000 கலைஞர்கள் பங்கேற்கும் லியோ பாடல்.. அனிரூத்தின் மாஸ் சாங் ரெடி

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து பணியாற்றும் திரைப்படம் லியோ. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே மாதம் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் அதிக கவனம் எடுத்திருப்பது இசையமைப்பாளர் அனிருத் இசை தான்.

- Advertisement -

டீசரில் இடம் பெற்ற பாடலில் ரசிகன் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்து ஒரு அப்டேட் வந்துள்ளது. அதன்படி அனிருத்தும், லோகேஷ் கனகராஜ் விஜயும் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இதில் படத்தின் பெரிய பிளஸ் பாயிண்டாக இசையும் பாடலும் அமைந்தது.இது போன்ற பாடல்கள் எல்லாம் நாடு தழுவிய ஹிட்டானது. இந்த நிலையில் வாத்தி கம்மிங் பாடல் போல் ஒரு மாஸ் பாடல் எடுக்கப்பட உள்ளது. இதற்காக செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பாடலில் சுமார் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த 2000 கலைஞர்களுக்கும் நடனப் பயிற்சி அடுத்த பத்து நாட்களில் நடைபெற உள்ளது இது முடிந்தவுடன் மே மாதம் முதல் வாரத்தில் இந்தப் பாட்டுக்கான படபிடிப்பு நடைபெற உள்ளது. பாடலை மட்டும் சுமார் பத்து நாட்கள் எடுக்க படக்குழு முடிவெடுத்துள்ளது லியோ படத்தில் பாடல் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மாஸ் பாடலை விஜய்க்காக அனிரூத் செய்திருக்கிறார்.

முன்பு வெளியான பாடல்களை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் நாடுதழுவிய அளவில் ஹிட் ஆகும் வகையில் அனிருத் இசை அமைத்திருக்கிறாராம். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தப் பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனத்தை இயக்கவில்லை. அதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் பெருமூச்சு அடையலாம். இந்த பாடலை தினேஷ் மாஸ்டர் தான் பணியாற்றுகிறார்.

Most Popular