Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentவிக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் ”எல்ஐசி”.. நாயகியாக கீர்த்தி ஷெட்டி.. நடிப்பு அரக்கனும்...

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் ”எல்ஐசி”.. நாயகியாக கீர்த்தி ஷெட்டி.. நடிப்பு அரக்கனும் இணைந்துவிட்டாராம்..

”லவ் டுடே” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் புதிய சென்ஷேனாக உருவானவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநர் மற்றும் நடிகர் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும் பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவனுடன் பிரதீப் ரங்கநாதன் கைகோர்ப்பதாக தகவல் வெளியாகியது. 

- Advertisement -

அதேபோல் அஜித்குமார் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதால், அவர் அடுத்து எந்த படத்தை இயக்குவார் என்ற கேள்வி எழுந்தது. இதன்பின் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படமொன்றை இயக்குவதாக வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த வீடியோவும் ட்ரெண்டாகியது. 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், நாயகியாக நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு எல்ஐசி என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த படத்தை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பதாக தெரிய வந்தது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், அனிருத், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

- Advertisement -

அதேபோல் நாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரும் பூஜையில் கலந்துகொண்டதன் மூலமாக இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கீர்த்தி ஷெட்டி தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வரும் சூழலில், இளம் ஹீரோவாக பிரதீப்பிற்கு ஜோடியாக சேர்ந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular