Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentலியோ படம் ஜெயிக்கணும் சாமியோ… திருப்பதியில் தனது குழுவினருடன் கோவிந்தா போட்ட லோகேஷ் கனகராஜ்…

லியோ படம் ஜெயிக்கணும் சாமியோ… திருப்பதியில் தனது குழுவினருடன் கோவிந்தா போட்ட லோகேஷ் கனகராஜ்…

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ வெளியாக இன்னும் ஒரு வார காலமே உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், நடன இயக்குனர் சாண்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர்.

- Advertisement -

ஜனவரி மாதம் காஷ்மீரில் தொடங்கிய படப்பிடிப்பு சென்னை தலக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. இதை எடுத்து லியோவில் இருந்து நான் ரெடி தான் பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இதுவரை லியோ திரைப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் டிரைலரும் ரசிக்கும் வகையில் இருந்தது.

ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே சீரியல் கில்லர் கதையை விஜய் கூறுவது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தனது குடும்பத்துடன் காஷ்மீரில் வாழும் விஜய்யை, வெவ்வேறு குழுக்களை சேர்ந்த ரவுடிகள் துரத்திக் கொண்டே இருக்க முதலில் பயந்து ஓடும் விஜய் பிறகு அவர்களை எப்படி சமாளிக்கிறார் என்பதை ட்ரெய்லரில் லோகேஷ் கூறியிருந்தார். இருப்பினும் அதில் விஜய் கூறிய கெட்ட வார்த்தை, பலரையும் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால், அந்த வார்த்தையை தற்போது மியூட் செய்து விட்டனர்.

- Advertisement -

பார்த்தி என்னும் கதாபாத்திரத்தில் காஷ்மீரில் அமைதியாக வாழும் விஜய், பிறகு லியோவாக வருவது என இரண்டு கதாபாத்திரங்கள் அவருக்கு இருக்கிறது. விஜய்க்கு மனைவியாக திரிஷாவும், மகனாக கேரள நடிகர் மேத்யூ தாமஸ் நடித்துள்ளனர். அதுபோக விஜய்க்கு மகளும் இருக்கிறாராம். நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியங்கா ஆனந்த் நடித்துள்ளார்.

- Advertisement -

விஜய்யை பழி வாங்குவதற்காக தேடும் ஆண்டனி தாஸாக சஞ்சய் தத்தும், ஹரால்டு தாஸ் ஆக அர்ஜுனும் வருகின்றனர். படத்தில் அர்ஜுனும் விஜய்யும் சந்திக்கும் காட்சிகள் வேற லெவலில் இருக்குமாம். கடைசி 40 நிமிடங்கள் படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். வரும் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் நிலையில், அன்று அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோக இருபதாம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 காட்சிகளை திரையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி லோகேஷ் கனகராஜ் அவரது நண்பர் ரத்னகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதிக்கு சென்றுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாட்டுடன் அவர்கள் திருமலையில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோவை ரத்னகுமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் தங்கள் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Most Popular