Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஎன்னவா இருக்கும்? எல்சியூவில் இணையும் ஸ்ருதிஹாசன்.. ஏஜெண்டிட் டீனா-வின் ஷார்ட் ஃபிலிமை இயக்கும் லோகேஷ்?

என்னவா இருக்கும்? எல்சியூவில் இணையும் ஸ்ருதிஹாசன்.. ஏஜெண்டிட் டீனா-வின் ஷார்ட் ஃபிலிமை இயக்கும் லோகேஷ்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் அதிரி புதிரி ஹிட்டடித்தது. தமிழ் சினிமாவில் ரூ.500 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டிய விக்ரம் திரைப்படத்தின் மூலம் ஒரு யுனிவர்ஸையே லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். விக்ரம் படத்திற்கு முன் வெளியான கைதி திரைப்படத்தை கனெக்ட் செய்து அசத்தினார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சூர்யாவின் மூலமாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கி ட்விஸ்ட் வைத்தார். இதனால் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான லியோ படமும் எல்சியூவில் இணைந்தது.

கைதி படத்தில் வந்த நெப்போலியன், கிளைமாக்ஸ் காட்சியில் லியோவை ஜோஸ்ட் ஸ்குவாட்டிற்கும் அழைக்கும் விக்ரம் என்று இரு கனெக்டை வைத்தார் லோகேஷ் கனகராஜ். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து கைதி 2 உள்ளிட்ட படங்களை இயக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பக்கமும், நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பக்கமும் நிற்கின்றனர். அதுமட்டுமல்லால், ”இனிமேல் டெலுலு இஸ் தி நியூ சொல்லுலு” என்று பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல் ரிலேஷன்ஷிப் பற்றியும் ஹேஷ்டாக் பதிவிடப்பட்டுள்ளது. இது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஏற்கனவே எல்சியூ தொடர்பாக ஒரு ஷார்ட் பிலிமை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதாக நரேன் கூறியிருந்தார்.

- Advertisement -

அந்த ஷார்ட் பிலிம் தான் இதுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விக்ரம் படத்தில் நடித்த ஏஜெண்ட் டீனாவாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகவும், காதலர் தினத்தை முன்னிட்டு இந்த குறும்படத்தை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ரசிகர்களிடையே இது என்னவாக இருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

Most Popular