Saturday, April 27, 2024
- Advertisement -
HomeEntertainmentஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ்.. விஜய் தேவரகொண்டாவுக்கு போட்டி கொடுப்பாரு போலயே!

ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ்.. விஜய் தேவரகொண்டாவுக்கு போட்டி கொடுப்பாரு போலயே!

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்த லோகேஷ் கனகராஜ், அதன்பின் கார்த்தி நடிப்பில் உருவாகிய கைதி படத்தை இயக்கினார். இந்த படம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வெளியாகியது. இருப்பினும் பிகில் படத்தை காட்டிலும் கைதி படம் சிறப்பான விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. ரூ.500 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டியதால், கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் நெருங்கிய நட்பில் இருந்தார்.

பின்னர் வெளியான லியோ திரைப்படமும் லோகேஷ் கனகராஜ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இதனால் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறினார். அடுத்ததாக ரஜினிகாந்த் படத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் வீடியோ பாடல் ஒன்றில் நடித்துள்ளார்.

- Advertisement -

நடிகையும், இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசன் உருவாக்கியுள்ள பாடலில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது. இந்த நிலையில் ”இனிமேல்” என தொடங்கும் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் ஸ்ருதிஹாசனுடன் நெருக்கமான இருக்கும் காட்சிகளில் லோகேஷ் கனகராஜ் அசத்தலாக நடித்துள்ளார்.

- Advertisement -

ஸ்கிரீனில் பார்க்கவும் லோகேஷ் கனகராஜ் நாயகனுக்கான லுக்கில் இருப்பதால், வரும் நாட்களில் லோகேஷ் கனகராஜ் நடிகராகவும் வலம் வருவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மொரட்டு தனமாக இருக்கும் ஹீரோவை போல் லோகேஷ் கனகராஜ் இருப்பதால், விஜய் தேவரகொண்டாவுக்கு போட்டியாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular