Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentஆஹா... மாஸ்டர் போஸ்டர் மாதிரியே இருக்கே பாஸ்.. கொஞ்சம் அப்டேட் ஆகியிருக்கலாமே லோகேஷ்.. கிண்டல் செய்யும்...

ஆஹா… மாஸ்டர் போஸ்டர் மாதிரியே இருக்கே பாஸ்.. கொஞ்சம் அப்டேட் ஆகியிருக்கலாமே லோகேஷ்.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்

மாஸ்டர் படத்திற்கு பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. விக்ரம் என்ற மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்தாதாக என்ன செய்ய காத்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது. அதற்கேற்ப லியோ படத்தின் டைட்டில் வீடியோவே மிரட்டலாக அமைந்தது.

- Advertisement -

பின்னர் லியோ படத்தில் நடிகை த்ரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், நடிகர் அர்ஜூன், வில்லனாக சஞ்சய் தத், மன்சூர் அலிகான், ஜாஃபர், இயக்குநர் மிஷ்கின், கவுதம் மேனன் என்று நட்சத்திர பட்டாளமே இணைந்தது. இதையடுத்து ஒட்டுமொத்த படக்குழுவும் காஷ்மீருக்கு சென்று 50 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பை நடத்தி மிரட்டலான மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டது. 

இதனால் லியோ படம் விஜய் சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறினர். முதலில் நரைத்த முடியுடன் காணப்பட்ட விஜய், சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் இளமையான தோற்றத்தில் காணப்பட்டார். இதனால் விஜய்-க்கு இரு ரோல்கள் என்றும், இளமையான விஜய் பிளாஷ்பேக் காட்சியில் வருவார் என்றும் சொல்லப்பட்டது.

- Advertisement -

இதன் படப்பிடிப்பு மொத்தமாக 126 நாட்களில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் அக்.19ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லியோ படக்குழு சரியாக 30 நாட்களுக்கு முன்பிருந்த விளம்பரப் பணிகளை தொடங்கியுள்ளது.

- Advertisement -

இதனால் அடுத்தடுத்து 3 போஸ்டர்களை வெளியிட்ட லியோ படக்குழு, இன்று 4வது போஸ்டரை வெளியிட்டுள்ளது. கடந்த 3 போஸ்டர்களிலும் விஜய் மட்டுமே தோன்றிய நிலையில், இன்று மாலை வெளியிடப்பட்ட போஸ்டரில் விஜய் – சஞ்சய் தத் இருவரும் உள்ளனர். இதன் மூலம் சஞ்சய் தத் முக்கிய வில்லன் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் இவை மாஸ்டர் படத்தின் போஸ்டர் கதைகள் போலவே கிளைமேக்ஸ் காட்சியாக அமையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Most Popular