நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்.19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா செபஸ்டியன், ப்ரியா ஆனந்த், மரியம் ஜார்ஜ், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாதி சிறப்பான விமர்சனங்களையும், இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களையும் பெற்றது.
அதுமட்டுமல்லாமல் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் பொய்யானவை, மன்சூர் அலிகான் தனது பார்வையில் தான் கதையை கூறியுள்ளார், விஜய் உடலில் துப்பாக்கி குண்டுகளின் தழும்பு இல்லை என்று விதவிதமான கதைகள் வெளி வந்தன. அதேபோல் டிரக்ஸ் இல்லாத நாட்டை அமைக்க வேண்டுமென்றே எல்சியூ-வுடன் லியோ இணைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த சூழலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் இரண்டாம் பாதி குறித்து பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்துள்ளார். அதில் பார்த்திபனாக இருக்கும் விஜய், சத்தியமங்கலம் அநாதை இல்லத்தில் வளர்ந்ததாக கூறுவார். அதேபோல் விக்ரம் படத்தில் அமர் கதாபாத்திரமும் சத்தியமங்கலம் அநாதை இல்லத்தில் தான் வளர்ந்ததாக சொல்லப்படும்.
இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் பேசும் போது, சத்தியமங்கலம் அநாதை இல்லத்தில் தான் பார்த்திபன் – அமர் வளர்ந்ததாக கூறியுள்ளார். அதேபோல் அதனை நம்ப வைப்பதற்காகவே தினேஷ் மாஸ்டர் மூலமாக சில பொய்யான கதைகளை விஜய் சொல்ல வைத்தது போலவும் படமாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதேபோல் காபி ஷாட் சண்டை காட்சிக்கு பின் பார்த்திபன் என்று யார் அழைத்தாலும் உடனடியாக விஜய் திரும்பி பார்க்க மாட்டார். அவர் அப்போதே லியோ வெளியில் வந்துவிட்டான் என்பதை கூறவும், லியோவாக விஜய் சார் உணர்கிறார் என்பதை கூறவும் காட்சிகளை வைத்ததாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதேபோல் பிளாஷ்பேக் காட்சிகள் பொய்யானவை என்று படத்தின் இறுதியில் ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு லோகேஷ் கனகராஜிடம் இதுவரை பதில் இல்லை என்பது குறிப்பிடத்தகக்து.