தமிழ் சினிமாவில் ஐந்து திரைப்படங்களை மட்டுமே எடுத்து புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான அதேசமயம் நடிகர்களும் விரும்பும் இயக்குனராக பலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது அறிமுகப்படமான மாநகரம் திரைப்படத்தின் மூலமே தன்னை யார் என்பதை நிரூபித்து விட்டார். ஒரே நாளில் இடம் பெறும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
முந்தைய திரைப்படம் ஒரு நாளில் நடைபெறும் கதைக்களம் என்றால், அவரின் அடுத்த திரைப்படமான கைதி ஒரே இரவில் நிகழும் கதைக்கலாம். காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருக்கும் போதை பொருளைக் கைப்பற்ற துடிக்கும் ஒரு கும்பல், அதற்குக் காரணமான காவலர்களை கொல்லத் துணியும் ரவுடிகள், அவர்களிடமிருந்து காவலர்களை காப்பாற்றும் முன்னாள் கைதி என காட்சிக்கு காட்சி பரபரப்புடன் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.
கைதி திரைப்படத்தில் இருந்து சில காட்சிகளை விக்ரம் படத்தில் இணைத்து லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்னும் கான்செப்ட்டை கொண்டு வந்தார் லோகேஷ். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தப் போனதால், அவர் எங்கு சென்றாலும் எல் சி யு பற்றி பேசி வருகின்றனர். இந்த நிலையில் லியோ படத்தை முடித்துவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது.
இதற்கான திரைக்கதை எழுதும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இயக்கத்தைத் தவிர தயாரிப்பதிலும் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். ஜி ஸ்கொயட் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கும் அவர், உரியடி திரைப்படத்தின் இயக்குனர் விஜயகுமார் நடித்திருக்கும் பைட் கிளப் எனும் படத்தை வெளியிடுகிறார். நாளைய இயக்குனர் இந்நிகழ்ச்சியின் மூலம் குறும்படங்களை இயக்கி தனது திறமையை வளர்த்துக் கொண்ட விஜயகுமார், 2016 ஆம் ஆண்டு உறியடி திரைப்படத்தை எடுத்தார். அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், இளைஞர்களை பெரிதும் ஈர்த்தது.
கல்லூரி மாணவர்களும் சாதி அரசியலில் ஈடுபடுபவர்களும் மோதிக் கொள்ளும் வகையில் உறியடி திரைப்படத்தின் காட்சிகளை அவர் எடுத்திருந்தார். குறிப்பாக படத்தின் இடைவெளி காட்சி பலருக்கும் உற்சாகத்தை கொடுத்தது. இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ் வரும் காட்சிகள் அனைத்தும் மிக திரில்லிங்காக எடுக்கப்பட்டதால் பலரும் உறியடியை கொண்டாடினர். இதை எடுத்து அதன் இரண்டாம் பாகத்தை 2019 ஆம் ஆண்டு அவர் வெளியிட்டார். ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் பெரிதாக கவரவில்லை.
இந்நிலையில், அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் விஜயகுமார் பைட் கிளப் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அது முழுக்க சண்டை காட்சிகள் நிரம்பி இருக்க, யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது. வேற வேற பேர்ல வேற வேற ஆளுங்க இங்க அடிச்சிட்டுதான் இருக்க போறாங்க போன்ற வசனங்கள் பலருக்கு கவனத்தையும் ஈர்த்துள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.