Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentதலைவர் 171 வது திரைப்படத்திற்கான கதையை விஜயிடம் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்… உடனடியாக தளபதி கொடுத்த...

தலைவர் 171 வது திரைப்படத்திற்கான கதையை விஜயிடம் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்… உடனடியாக தளபதி கொடுத்த ரியாக்ஷன்தான் இதில் ஹைலைட்டே…

தமிழ் சினிமாவில் மணிரத்னத்தில் தொடங்கி மாரி செல்வராஜ் வரை முக்கியமான பல இயக்குனர்கள் இருந்தாலும், அவர்களில் தனக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனக்கென பாதையை அவர் உருவாக்கிக் கொண்டார்.

- Advertisement -

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் ஆரம்பத்தில் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால், வேலையை உதறி தள்ளி விட்டு சென்னைக்கு கிளம்பிய அவர், தனக்கு இருக்கும் சினிமா கண்ணோட்டத்தை வைத்து குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார். அது மிகச் சரியாக கிளிக்காக, அங்கிருந்து லோகேஷ் கனகராஜின் வெள்ளித்திரை பயணம் ஆரம்பித்தது.

பொட்டன்ஷியல் தயாரிப்பு நிறுவனம் அவரை இயக்குனராக்கி அழகு பார்க்க, மாநகரம் எனும் திரைப்படத்தை எடுத்து தமிழ் சினிமா இதுவரை தொடாத கதைகளத்தை ரசிகர்களுக்கு விருந்தளித்தார் லோகேஷ் கனகராஜ். அங்கிருந்து கைதி படத்திற்குச் சென்ற அவர், அதிலும் மாபெரும் வெற்றியை ருசித்தார். பிறகு தளபதி விஜயுடன் மாஸ்டர், உலகநாயகன் கமல்ஹாசன் உடன் விக்ரம் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கினார். இதில் விக்ரம் திரைப்படத்தில் முதல்முறையாக எல் சி யூ என்னும் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

இவரது யுக்தி மிகச் சரியாக கிளிக் ஆனதால் ரசிகர்கள் அதனை கொண்டாடினர். தற்போது அவர் விஜயை வைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார். ஒரு 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில் ஏற்கனவே இதிலிருந்து வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது திரைப்படமும் எல்சியூவில் இணைந்து விடாதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் முடிந்ததும் ரஜினியுடன் சேர இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

தலைவர் 171வது திரைப்படமாக உருவாகும் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இதன் சூட்டிங் தொடங்குகிறது. இந்த திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, தலைவர் 171 வது திரைப்படத்திற்கான கதையை தளபதி விஜய் அண்ணாவிடம் எடுத்துக் கூறினேன்.

அதற்கு பயங்கரமா இருக்குடா என்று கூறிய விஜய் அண்ணா, இப்போது வரை வெறும் பத்து நிமிடங்களில் நான் எந்த கதையும் விரும்பியது இல்லையடா என்று உற்சாகத்துடன் பேசியதாக தெரிவித்தார். லோகேஷ் கனகராஜ் கூறிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular