லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. உலகளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்திம் வெளியீட்டிற்கு முன்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்க தொடங்கினார்.
ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படம் தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, ஸ்னேகா, மீனாட்சி சவுத்ரி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.
அண்மையில் மாநாடு படம் வெளியாகி இரண்டாம் ஆண்டு கொண்டாடப்பட்ட நிலையில், ட்விட்டரில் இயக்குநர் வெங்கட் பிரபு டைம் லூப் தொடர்வதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படமும் டைம் லூப் கான்செப்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் வெளியான லூட்டர் படத்தின் தழுவலாக இருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி 68 படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் லவ் டுடே படத்தின் நாயகி இவானா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் படங்களில் எப்போதும் தங்கை மற்றும் குழந்தை செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும். லியோ படத்தில் கூட மடோனா செபஸ்டியன் தங்கையாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தளபதி 68 படத்தின் இவானா தங்கையாக நடித்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது கதாபாத்திரத்தை படக்குழு மறைத்து வைத்துள்ளதால், அவர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. விஜய்-க்கு தங்கையாக நடிப்பதால், இவானாவும் உற்சாகத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.