Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentபிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேரும் ஜான்வி கபூர்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பாம்!

பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேரும் ஜான்வி கபூர்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பாம்!

கமல்ஹாசன் எந்த அளவிற்கு அமைதியாக மார்க்கெட் இல்லாமல் இருந்தாரோ தற்பொழுது  படங்கள் நடிப்பது தயாரிப்பது என படு பிஸியாக இருந்து வருகிறார். இந்தியன் – 2, ஹெ.வினோத் படம், பிராஜக்ட் கே, மணிரத்னம் படம் என்று வரிசைக் கட்டி பிரம்மாண்ட படங்கள் நிற்கின்றன. அதுமட்டுமல்லாமல் சிலம்பரசன்,  சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை வைத்து பிரம்மாண்ட படங்களை தயாரித்தும் வருகிறார்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் – கமல்ஹாசன் கூட்டணி

இதனைத்தொடர்ந்து அடுத்து தயாரிக்கும் தன் படத்திற்கு விக்னேஷ் சிவனை இயக்குனராக களம் இறக்குகிறார் கமல்ஹாசன். அஜித் குமார் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில் இருக்கும் விக்னேஷ் சிவன், படு ஜோராக ஒரு காதல் கதையை கமல்ஹாசனிடம் சொல்லி ஓகே செய்திருக்கிறார்.

இதில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியது. அதேபோல் நாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க திட்டம் போட்டுள்ளார் கமல்ஹாசன். ஏற்கனவே ஸ்ரீதேவியுடன் 80களில் இருந்து ஜோடி போட்ட கமல் தமிழ் சினிமாவிற்கு அவருடைய மகளை கொண்டு வருவதற்கு ஆர்வம் காட்டுகிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜான்வி கபூர்?

ஜான்விகபூரும் ஹிந்தியில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார். இதன் காரணமாகவே தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரை தமிழ் சினிமாவில் பார்ப்பதற்கும் மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் காமெடி கலந்த லவ் ஸ்டோரியில் தயாராக போகிறது. அதாவது மொபைல் போனில் டைம் டிராவலிங் செய்வதை பற்றிய படம் எடுக்க இருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த கதை முன்னதாக சிவகார்த்திகேயனுக்காக தயார் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

- Advertisement -

விரைவில் வெளியாகும் அறிவிப்பு

எனவே பல முன்னணி பிரபலங்கள் இணைந்த இந்த டீம் விரைவில் சேரப் போகிறது என்ற தகவலே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இணையப் போகும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். முதலில் ஏகே 62 பட வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு தான் கிடைத்தது ஆனால் கதையில் ஏற்பட்ட குளறுபடியால் அது இப்போது மகிழ்திருமேனி கைவசம் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.


Most Popular