Entertainment

”உயிருக்கு உயிராக” விஜய்-யிடம் முத்தம் பெற்ற பாடலாசிரியர் விவேக்.. வாரிசு பட ஷூட்டிங்கில் நிகழ்ந்த ருசிகரம்!

பரியேறும் பெருமாள், மனிதன், வடசென்னை, இறுதிச்சுற்று, எனக்குள் ஒருவன் உள்ளிட்ட படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதி ரசிகர்களைக் கவர்ந்தவர் பாடலாசிரியர் விவேக். இவர்  நடிகர் விஜய்க்கு கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான பாடல் வரிகளைத் எழுதி வருகிறார். கிட்டத்தட்ட நடிகர் விஜயின் ஆஸ்தான பாடலாசிரியர் என்று சொல்லும் அளவிற்கு பாடலாசிரியர் விவேக் விஜயுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

மெர்சல் படத்தில் இடம்பெற்ற மெர்சல் அரசன், ஆளப்போறான் தமிழன், நீ தானே, சர்க்கார் படத்தில் சிம்டாங்காரன், பிகில் படத்தில் சிங்கப்பெண்ணே என தொடர்ந்து ஹிட் பாடல்களை எழுதி விஜய்-யின் விருப்பமான பாடலாசிரியராக விவேக் உருவெடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான வாரிசு படத்திலும் ரஞ்சிதமே, தீ தளபதி என ஹிட் பாடல்களால் கவன ஈர்த்துள்ளார். இந்தப் பாடல்களுக்காக நடிகர் விஜய்யிடமிருந்து ஸ்பெஷல் பாராட்டுளும் கிடைத்தது.

Advertisement

பாடல் எழுவதோடு மட்டுமல்லாமல், வாரிசு படத்தில் வசனகர்த்தாவாகவும் விவேக் பணியாற்றினார். முக்கியமான காட்சியில் அட்ராக்ட் பன்ற அண்ணன், ஆக்ரோஷமான அண்ணன் என்று சிறப்பான உடல்மொழியோடு விஜய் பேசிய வசனம், விவேக் எழுதியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய் தனக்கு முத்தமிடும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து உருக்கமாக விவேக் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் சில பந்தங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. உங்களுடனான இந்த நம்ப முடியாத பயணத்தில், நீங்கள் என்னை ஒரு மூத்த சகோதரனைப் போல நேசித்தீர்கள், கவனித்துக் கொண்டீர்கள்.  நான் எப்போதும் விரும்புவது உங்களைப் போன்ற சிறந்த ஆன்மாவுக்கு சிறந்த விஷயங்கள் நடக்க வேண்டும் என்பதுதான். எனது கலைப் பயணத்தில், இந்த அழகான தருணத்தை எதுவும் முறியடிக்கவில்லை.  உயிருக்கு உயிராக உங்களை நேசிக்கிறேன் மை தளபதி” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

பாடலாசிரியர் விவேக்கின் இந்தப் பதிவு ட்விட்டரில் வைரலாகி அதிக லைக்குகளைக் குவித்து வருகிறது. அதேபோல் நீண்ட நாட்களுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஓடிடியில் வரவுள்ளதால், வாரிசு பட ரசிகர்களும் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். விஜய் சேதுபதிக்கு பின், விஜய்-யிடம் முத்தம் பெற்ற நட்சத்திரமாக விவேக்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top