லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அதிரி புதிடி ஹிட்டடித்தது. இதனைத் தொடர் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. லியோ படத்தில் விஜய் மட்டுமல்லாமல் சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
126 நாட்கள் நடைபெற்ற லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிவுக்கு வந்தது. இதனிடையே லியோ படம் இரு பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.
இதற்கான பணிகளில் லியோ படக்குழு தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் லியோ படத்திற்கு பின் நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இந்தப் படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் தயாரிக்கவுள்ளது. இசைப் பணிகளை யுவன் சங்கர் ராஜா மேற்கொள்ள உள்ளார்.


இந்தப் படத்தில் விஜய்-க்கு இரு கதாபாத்திரங்கள் என்றும், ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோதிகாவை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இளமையான கதாபாத்திரத்துக்கு நாயகியாக நடிகை பிரியங்கா மோகனை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் விஜய்-க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அரசியல் கலந்த ரிவென்ஜ் ஸ்டோரியாக தளபதி 68 உருவாக உள்ளது. இதனால் முக்கியமான கதாபாத்திரங்களுக்கு நடிகர் மாதவன் மற்றும் பிரவுதேவாவை நடிக்க வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அவர்களிடம் கதை கூறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் தளபதி 68 படம் மீதான எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.