Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainment”அனிமல்” இரண்டாம் பாகத்தில் ட்விஸ்ட்.. ரன்பீர் கபூர் காதலியாக மாளவிகா மோகனன்.. என்ன பண்ண காத்திருக்காங்களோ

”அனிமல்” இரண்டாம் பாகத்தில் ட்விஸ்ட்.. ரன்பீர் கபூர் காதலியாக மாளவிகா மோகனன்.. என்ன பண்ண காத்திருக்காங்களோ

அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், த்ரிப்தி டிம்ரி, சன்னி டியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் அனிமல். டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

- Advertisement -

இந்த படத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது அதன் தேவையில்லாத காட்சிகளும், ரன்பீர் கபூரின் கதாபாத்திரமும் தான். அர்ஜூன் ரெட்டியில் விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்திற்கு சாயம் பூசியதை போலவே அனிமல் படத்தின் ரன்பீர் கபூர் நடித்திருப்பார். அதிலும் ஆல்ஃபா மேல் என்று அவர் விளக்கம் கொடுக்கும் காட்சிகளிலெல்லாம் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் வாரிசு, அர்ஜூன் ரெட்டி, கைதி, விக்ரம், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களின் காட்சிகளை அடுத்தடுத்து வைத்து உருவாக்கியதை போலவே படம் நகர்வது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரமாக நினைத்து கொண்டு ரன்பீர் கபூர் செய்யும் சேட்டைகளை பார்த்த முடியாத அளவிற்கு மோசமாக இருக்கும்.

- Advertisement -

இருப்பினும் படம் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதால், அதன் இரண்டாம் பாகமான அனிமல் பார்க் படத்தை எடுக்க படக்குழு முனைப்பு காட்டும் என்று தெரிகிறது. இந்த படத்தின் மூலம் ராஷ்மிகா மற்றும் த்ரிப்தி டிம்ரி இருவருக்கும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் இன்னொரு நாயகியை கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மற்றொரு ரன்பீர் கபூருக்கு காதலியாக இருப்பது போல் காட்சிகள் அமையவுள்ளதாகவும், அதற்காக நடிகை மாளவிகா மோகனனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டாலும், சினிமாவில் அடக்கமான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். ஒருவேளை அனிமல் 2 படத்தில் நடித்தால், நிச்சயம் த்ரிப்தி டாம்ரியை போல் சில காட்சிகளில் நடிக்க வேண்டியதிருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular