Friday, December 6, 2024
- Advertisement -
HomeEntertainmentவிடுதலை திரைப்படத்தில் இணைந்த பா ரஞ்சித்தின் ஆஸ்தான நடிகர்… மின்னல் வேகத்தில் செயல்படும் வெற்றிமாறன்… வேற...

விடுதலை திரைப்படத்தில் இணைந்த பா ரஞ்சித்தின் ஆஸ்தான நடிகர்… மின்னல் வேகத்தில் செயல்படும் வெற்றிமாறன்… வேற லெவல் அப்டேட் இதோ…

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். கதைக்கு என தனி முக்கியத்துவம் கொடுத்து, அதிலிருந்து திரைக்கதையை நகர்த்துவதில் கெட்டிக்கார இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், தனது முதல் திரைப்படத்திலேயே தான் யார் என்பதை விளங்க வைத்தார்.

- Advertisement -

தனுசுடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய நான்கு திரைப்படங்களைக் கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வருகிறார் வெற்றிமாறன். இதில், ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படங்களுக்கு வெற்றிமாறன் தேசிய விருதை பெற்றார். அவரது விசாரணை திரைப்படமும் தமிழ் சினிமாவின் மைல் கல்லில் ஒன்றாக அமைந்தது.

அசுரன் திரைப்படத்திற்கு பிறகு, யாருமே எதிர்பார்க்காத வகையில் நகைச்சுவை நடிகர் சூரியுடன் இணைந்த வெற்றிமாறன், விடுதலை ப்ராஜெக்ட் கையில் எடுத்தார். இதில் முதலில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் வனப்பகுதிக்குள் நிறைய நாட்கள் சூட்டிங் எடுக்க வேண்டும் என்பதால் பாரதிராஜாவால் முடியாமல் போக, விஜய் சேதுபதியை பிடித்தார் வெற்றிமாறன். பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போன விஜய் சேதுபதி, விடுதலையில் இரண்டு மூன்று காட்சிகளில் வந்தாலும் தனது உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

முதலில் ஒரு பாகம் தான் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியில் இறங்கிய வெற்றிமாறன், அதில் சுவாரசியமான பட காட்சிகளை சேர்த்ததால் விடுதலையை இரண்டு பாகமாக எடுக்க முடிவு செய்தார். தற்போது முதல் பாகம் வெளியாகி இருக்கும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான பணியில் அவர் வேகம் எடுத்து வருகிறார். முதல் பாகம் எப்படி சூரியின் நடிப்புக்கு தீனி போடுவதாய் ஒவ்வொரு காட்சிகளும் இருந்ததோ, அதேபோல் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

விஜய் சேதுபதிக்காக பல சுவாரசிய காட்சிகளை வெற்றிமாறன் புகுத்த இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்க உள்ளார். ஏற்கனவே அசுரனில் பச்சையம்மா கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருந்த மஞ்சு வாரியர், இப்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுபோக, அட்டக்கத்தி தினேஷும் விடுதலைப் படத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறனுடன் அவரும் மஞ்சுவாரியரும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், அவர் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பா ரஞ்சித்தின் பெரும்பாலான படங்களில் தினேஷ் இருக்கும் நிலையில், தற்போது அவர் வெற்றிமாறனுடன் இணைந்து இருப்பது விடுதலை படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Most Popular