Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentபட்டையை கிளப்பும் ரஜினி 170 படக்கூட்டணி… அமிதாப், நானி, பகத் பாசில், மஞ்சு வாரியர் நடிப்பதாக...

பட்டையை கிளப்பும் ரஜினி 170 படக்கூட்டணி… அமிதாப், நானி, பகத் பாசில், மஞ்சு வாரியர் நடிப்பதாக தகவல்… ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் மற்றும் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இது ஜெயிலர் திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படம் திரையரங்குகளில் வெளியாவதால் அவருடைய ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

இதனிடையே ரஜினியின் 170 வது படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜெய்பீமை போன்றே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் எடுக்கிறாராம் ஞானவேல். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி. அவர் ஒரு இஸ்லாமியராக நடிக்கிறாராம். போலீசார் நடத்தும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் நபராக நடிக்கிறாராம். காவல் துறையில் நடக்கும் அத்துமீறல்களை திரையில் காட்டப் போகிறாராம் ஞானவேல்.

கன்னியாகுமரியில் இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்குவதாக தெரிகிறது. ரஜினிகாந்த் ஞானவேல் இணையும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து தெலுங்கு நடிகர் நானியும் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் ரஜினியின் 170 வது படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அவர்கள் இருவருக்கும் மிகவும் அழுத்தம் வாய்ந்த இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் இருவரையும் ஞானவேல் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஏற்கனவே பக்கத்து பாசிலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், தற்போது அவர் ரஜினி படத்தில் இணைய இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Most Popular