Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாஏ ஆர் ரஹ்மான்  எனக்காக இந்த காரியத்தை செய்தார்.. மாரி செல்வராஜ் பேட்டி

ஏ ஆர் ரஹ்மான்  எனக்காக இந்த காரியத்தை செய்தார்.. மாரி செல்வராஜ் பேட்டி

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமக்காக செய்த காரிய ம் ஒன்று குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ ஆர் ரகுமான் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

அதுவும் நல்ல கதைக்களத்தை தேர்வு செய்து அதற்கு, இசை அமைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனராக மாரி செல்வராஜ் தற்போது முன்னேறி கொண்டிருக்கிறார். அவர் எடுத்த கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது அவர் எடுத்து வரும் திரைப்படம் மாமன்னன். இதில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோர் நடித்த வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ், என்னை ஒரு இயக்குனராகவும் என்னுடைய கருத்தையும் ஏ ஆர் ரகுமான் நன்றாக உள்வாங்கிக் கொண்டார்.நான் வேறொரு படத்திற்கான ஷூட்டிங்கில் இருந்த போது என்னை தொடர்பு கொண்டு பேசிய ஏ ஆர் ரகுமான் மாமன்னன் படம் என்னவாயிற்று நான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என கூறினார்.

நான் சார் படம் முடிந்து விட்டது. ஒரு மாதம் கழித்து நான் உங்களை வந்து சந்திக்கிறேன் என கூறினேன்.  இல்லை நீங்கள் வரவேண்டாம் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் நான் வந்து படத்தை பார்க்கிறேன் என கூறினார். சார் நான் திருநெல்வேலியில் இருக்கிறேன் அவ்வளவு தூரம் நீங்கள் வர வேண்டாமே என்று கூறினேன்.

எனினும் பரவாயில்லை என கூறி ஏ ஆர் ரகுமான் நேரடியாக திருநெல்வேலிக்கு வந்து என்னை சந்தித்து அங்கு இருந்த ஒரு திரையரங்கில் மாமன்னன் திரைப்படத்தை பார்த்தார். இதன் பின் அங்கு ஒரு நாள் என்னிடம் தங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

பிறகு காலை மீண்டும் எழுந்து சென்னை திரும்பினார். மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு அதன் இசை கோர்ப்பு பணியை மேம்படுத்துவதற்காக ரகுமான் சார் தற்போது பணியாற்றி வருகிறார். எனக்காக அவ்வளவு பிஸியாக இருந்தும் ரகுமான் சார் திருநெல்வேலி வந்து படத்தை பார்த்து விட்டு சென்றது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது என்று மாரி செல்வராஜ் கூறினார்.

Most Popular