Sunday, April 28, 2024
- Advertisement -
HomeEntertainmentவசூல் வேட்டையாடும் ”மாமன்னன்”.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாசிட்டிவ் விமர்சனங்களால் எகிறிய உதயநிதி...

வசூல் வேட்டையாடும் ”மாமன்னன்”.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாசிட்டிவ் விமர்சனங்களால் எகிறிய உதயநிதி படத்தின் வசூல்!

நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் மாமன்னன். இந்தப் படம் தற்போது சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷும் தங்களது கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளதாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் மாரி செல்வராஜ் நுட்பமாக காட்சிப்படுத்தியுள்ளார். அதேபோல் மலையாள வாடை தெரியாத ஃபகத் ஃபாசில் நடிப்பு, மக்களுக்கு ஏதும் செய்ய முடியவில்லை என்று கண்ணீர் கதறும் வடிவேலு, மகனுக்காக யாரையும் எதிர்க்க துணிந்த கதாபாத்திரத்தில் மாமன்னனாகவே வாழ்ந்திருக்கிறார்.

பெயர் அரசியல்

அதேபோல் மாமன்னன், அதிவீரன், வீராயி, கூத்தன் என்று பெயர் வைத்து எதற்காக அப்படியான பெயர் வைக்கப்பட்டுள்ளது என்ற புதிய அரசியலையும் அனைவருக்கும் புரியம்படி மாரி செல்வராஜ் பேசியுள்ளார். தலித் அரசியலை தமிழ்நாட்டின் முக்கிய நபரை வைத்தே பேச வைத்ததில் மாரி செல்வராஜ் படத்தை எடுத்ததிலேயே வென்றுவிட்டார். தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், வசூலிலும் மாமன்னன் தேறியுள்ளது.

- Advertisement -

முதல் நாள் வசூல் எவ்வளவு?

மாமன்னன் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.6.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமையன்றே ரூ.6.50 கோடி என்றால் அடுத்து வரும் 2 நாட்களிலும் மாமன்னன் வசூல் பின்னி பெடலெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங்காகவும் மாமன்னன் படம் அமைந்துள்ளது.

- Advertisement -

4 நாட்கள் வசூல் வேட்டை தான்

4 நாட்கள் தரமான வசூல் செய்யும் பட்சத்தில், அடுத்த இரு வாரங்களிலும் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் மட்டுமே ரிலீஸாக உள்ளது. இதனால் மாவீரன் வரும் வரை மக்களின் முதல் சாய்ஸாக மாமன்னன் மட்டுமே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இரவு காட்சிகள் நிரம்பின

நேற்று முதல் இரு காட்சிகளுக்கு கூட்டம் குறைவாகவே இருந்த சூழலில், அதிகரித்த பாசிட்டிவ் விமர்சனங்களால் மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் திரையரங்குகளில் நிரம்பியது. இதனால் போர்தொழில், குட் நைட், டாடா படங்களை போல் மாமன்னன் படமும் பெரிய ஹிட்டடிக்கும் என்று பார்க்கப்படுகிறது. 

Most Popular