Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentசொர்க்கத்தில் விவேக் - மயில்சாமி..மனதை உருக்கிய மீம்

சொர்க்கத்தில் விவேக் – மயில்சாமி..மனதை உருக்கிய மீம்

- Advertisement -

நடிகர் மயில்சாமியின் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. மயில்சாமி மிமிக்கிரி கலைஞராக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி பிறகு நடிக்க வந்து முன்னணி நகைச்சுவை நடிகர் என்ற பெயரை பெற்றவர். அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து பிறகு சமூக செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் மக்கள் சார்பாக பங்கேற்று பேசி வந்த மயில்சாமி சிவராத்திரி தினத்தன்று கோயிலில் கண்விழித்து இருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. இந்த நிலையில் மயில்சாமியின்  நண்பரும் பல்வேறு திரைப்படங்களில் கூட நடித்த நடிகர் விவேக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இருவரையும் வைத்து ஒரு மீம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தூள் படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்து சொர்க்கத்தில் இருவரும் சந்திப்பது போலவும் மயில்சாமிக்காக நடிகர் விவேக் காத்திருந்தது போலவும் இந்த மீம் வைக்கப்பட்டிருப்பது சினிமா ரசிகரின் மனதை உருக்கி விட்டது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மயில்சாமி உடன் தாமும் நல்ல நட்பில் இருந்ததாகவும் சிவன் குறித்து தாங்கள் அதிக அளவில் பேசி இருப்பதாகவும் தெரிவித்தார். மயில்சாமி சென்னையில் உள்ள ஒரு சிவன் கோவிலில் ரஜினி வந்து பால் அபிசேகம் செய்ய வேண்டும் என விரும்பியதாகவும், அவருடைய கடைசி ஆசையை தான் நிறைவேற்ற உள்ளதாகவும் நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

- Advertisement -

மயில்சாமியின் மறைவுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது மயில்சாமியின் உடல் இறுதி சடங்கு நடைபெற்ற வருகிறது. தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான மயில்சாமி சென்னை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மக்களுக்கு உதவி செய்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular