Saturday, December 7, 2024
- Advertisement -
HomeEntertainmentவேதாளத்தை ரீமேக் செய்துவிட்டு, அஜித் படத்தை கிரிஞ்ச் என்று கூறிய தெலுங்கு இயக்குனர்.. அப்போ எதுக்குயா...

வேதாளத்தை ரீமேக் செய்துவிட்டு, அஜித் படத்தை கிரிஞ்ச் என்று கூறிய தெலுங்கு இயக்குனர்.. அப்போ எதுக்குயா ரீமேக் செஞ்ச.. அஜித் ரசிகர்கள் ஆவேசம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களில் அஜித் நடித்துள்ளார். இதில் விவேகம் படத்தை தவிர, மற்றும் மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றன. ஒரே மாதிரியான நகரம் சார்ந்த கதைகளில் நடித்து வந்த அஜித்துக்கு, வீரம் திரைப்படம் நல்ல மாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், நான்கு தம்பிகளுக்கு அண்ணனாகவும் விநாயகம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஜித், படம் முழுக்க வேஷ்டி சட்டையுடன் காட்சி அளித்து பட்டையை கிளிப்பினார். இதேபோல், வேதாளம் திரைப்படமும் அஜித்திற்கு மிகப்பெரிய மார்க்கெட்டை கொடுத்தது. தங்கையை காக்கும் அண்ணனாக நடித்திருந்த அஜித், ஆக்சன் காட்சிகளில் அசத்தினார். அனிருத்தின் இசையில் பாடல்களும் செம ஹிட்டானதால், ரசிகர்களால் வேதாளம் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், வேதாளம் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். தெலுங்கில் மெகா ஸ்டார் ஆக இருக்கும் சிரஞ்சீவி, இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், சுருதிஹாசன் கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடித்திருக்கிறார்கள். போலோ சங்கர் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், வரும் பதினோராம் தேதி வெளியாகிறது.

- Advertisement -

இந்த நிலையில், போலோ சங்கர் திரைப்படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ள இயக்குனர் மெஹர் ரமேஷ், “இந்தத் திரைப்படத்தின் டிரைலரை கிரிஞ்ச் என கூறினால், அதனை விட பத்து மடங்கு கிரிஞ்சாக தமிழில் வெளியான வேதாளம் படம் இருக்கும் என்பதை நான் இங்கு தெரிவிக்கிறேன். இந்த போலோ சங்கர் திரைப்படம் அப்படி இருக்காது.

- Advertisement -

கதைக்கு ஏற்றவாறு படத்தில் பல காட்சிகளை மாற்றியமைத்து இருக்கிறேன்” என்று பேசியுள்ளார். தெலுங்கு இயக்குனர் இந்த பேச்சால் அஜித் ரசிகர்கள், ஆவேசம் அடைந்துள்ளனர். வேதாளம் படம் கிரிஞ்ச் என்றால், அதை எதற்கு ரீமேக் செய்கிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இயக்குனர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

Most Popular