Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainmentதுப்பாக்கி வில்லனை தூக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்.. சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் மோகன்லால்.. மிரளும் கோலிவுட்..

துப்பாக்கி வில்லனை தூக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்.. சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் மோகன்லால்.. மிரளும் கோலிவுட்..

டாக்டர், டான், மாவீரன் என்று வித்தியாசமான கதையை கொண்டு பெரிய ஹிட்களை கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் சாய் பல்லவி, ராகுல் போஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அயலான் படத்திற்கு பின் இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. தர்பார் படத்திற்கு பின் முன்னணி ஹீரோக்கள் யாரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க முன் வராததால், சிவகார்த்திகேயனை வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க தீவிரமாக இருக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஷூட்டிற்கு பின் படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் முக்கியமான கதாபாத்திரத்தில் மோகன் லால் மற்றும் வில்லனாக நடிக்க வித்யுத் ஜம்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க அதிரடி ஆக்‌ஷன் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயனுக்கு இது மிகமுக்கியமான படமாக இருக்கும் என்று கோலிவுட் முனுமுனுத்து வருகிறது. அதேபோல் விஜய்-க்கு கூறிய கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular